தமிழ்நாட்டில் இந்தாண்டு தொடக்கமான ஜனவரியில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட வேளாண் நிலத்தை கணக்கெடுப்பதற்காக அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையிலான மத்தியக் குழுவினர் பிப்ரவரி 4ஆம் தேதி வருகைதரவுள்ளனர்.
விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் ஆகிய மாவட்டங்களில் நேரில் ஆய்வுசெய்யவுள்ளனர்.
டெல்லியிலிருந்து மதுரை விமானத்திற்கு வரும் மத்தியக் குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, ஒரு குழுவினர் விருதுநகருக்கும், மற்றொரு குழுவினர் திருச்சி விமான நிலையத்திற்கும் வந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்குச் சென்று ஆய்வு நடத்தவுள்ளனர்.
மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுநடத்திய பிறகு, பிப். 6ஆம் தேதி சென்னையிலிருந்து மத்தியக்குழு டெல்லிக்குச் செல்லவுள்ளனர். ஏற்கனவே நிவர், புரெவி புயுலுக்கு தமிழ்நாட்டில் மத்தியக் குழு ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உயிர் காப்பதே என் கடமை - மருத்துவர் சிசிர் குமார் சாகு