இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிவர் புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், இதுவரை பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு விதிமுறைகளைத் தளர்த்தி இழப்பீடு வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கரோனா பேரிடர் பாதிப்பின் காரணமாகவே நெல், வாழை, தென்னை போன்றவற்றுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவில்லை என்பதை கருத்தில் கொண்டு, தற்போது பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் பயன் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மேலும், மழையால் மூழ்கியுள்ள நெற் பயிரை மீட்டெடுப்பதற்கான சிறப்பு உதவிகளையும் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு உடனடியாக அதிமுக அரசு செய்து தர வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.