ETV Bharat / city

செல்ஃபோன் பறிப்பில் ஈடுப்பட்ட 3 பேர் கைது - செல்போன் பறிப்பு

சென்னையில் வெவ்வேறு இடங்களில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

cell
cell
author img

By

Published : Sep 21, 2020, 11:21 AM IST

சென்னை செம்பியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து செல்போன் பறிப்பு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்ததால் போலீசார் தனிப்படை அமைத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பூர் பகுதியில் நடந்து சென்ற மூர்த்தி என்பவரிடமிருந்து இவரும் இவரது கூட்டாளிகளான ஆகாஷ், இளமாறன் ஆகியோர் இணைந்து இருசக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதேபோல் கீழ்ப்பாக்கம்,மேட்டுப்பாளையம் என பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனம், செல்ஃபோன் பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இவரிடமிருந்து 3 செல்ஃபோன்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே ஆகாஷ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் தற்போது விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக இருக்கும் இளமாறனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பூர் ஐயப்பன் கோயில் அருகே நடந்து சென்ற திருஞானம் என்பவரிடமிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் செல்ஃபோனை பறித்து சென்றனர். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஐ.எம்.இ.ஐ எண்களை வைத்து தேடி வந்தனர்.

செல்போன் எண் ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஷாஜகான் என்பவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்து. அவரை பிடித்து விசாரிக்கும் போது அரவிந்த் மற்றும் வினோத் குமார் ஆகியோரிடமிருந்து 2400 ரூபாய்க்கு வாங்கியதாக தெரிவித்தார். அதனடிப்படையில், அரவிந்த் மற்றும் வினோத் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.