ETV Bharat / city

வாயில் 526 பற்களா? மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! - saveetha dental hospital

சென்னை: செல்போன் கதிர்வீச்சு காரணமாகக்கூட வாயில் 526 பற்கள் தோன்றி இருக்கலாம் என அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

மருத்துவகுழு
author img

By

Published : Aug 1, 2019, 11:44 PM IST

சென்னை ஆவடியில் வசித்து வரும் பிரபுதாஸ் என்பவரின் மகன் ரவீந்திரன். இவருக்கு சிறுவயதில் இருந்து வாயின் கீழ் தாடையில் வீக்கம் காணப்பட்டுள்ளது. இதற்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனையை நாடியுள்ளனர். ஆனால் அவருக்கு என்ன பிரச்னை என்பதை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. வீக்கம் அதிகரித்து வலியும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. இதனால் அவரது பெற்றோர்கள் பூந்தமல்லியில் உள்ள சவிதா பல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுவன் ரவீந்திரனுக்கு பிரத்யேகமாக தாடையை மட்டும் பரிசோதிக்கும் சி.டி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது வாயில் சிறிதும் பெரிதுமான வளர்ச்சியடையாத பற்கள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ந்துபோயினர்.

பின்னர் மருத்துவர் ரமணி மற்றும் அவரது மருத்துவ நிபுணர் குழு ஒன்றரை மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் 4×3 சென்டிமீட்டர் அளவு கொண்ட கட்டியை வாயிலிருந்து அகற்றினர். அதன்பின் அக்கட்டியை ஆய்வு செய்ததில் மொத்தமாக 200 கிராம் எடை கொண்ட 526 பற்கள் இருந்தது தெரியவந்தது.

மருத்துவகுழு

இதுகுறித்து மருத்துவக் குழு கூறுகையில், ”கடந்த 2014ஆம் ஆண்டு மும்பையில் 17 வயது சிறுவனுக்கு 232 பற்களை நீக்கியது சாதனையாக கூறப்பட்டது. ஆனால், தற்போது சவிதா செய்துள்ளது உலகிலேயே முதல்முறையாக செய்யப்பட்டுள்ளது. இது போன்ற அரிதான பிரச்னைகள் செல்போன் கதிர்வீச்சினாலும் ஏற்பட்டிருக்க பெருமளவு வாய்ப்புள்ளது. இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்ப நிலையில் உள்ள இந்த ஆய்வில் 10 சதவீதம் அளவுக்கு செல்போன் கதிர்வீச்சினால் உடல்நலம் சார்ந்த ஆபத்துகள் ஏற்படுவதை கண்டுபிடித்துள்ளோம்.”, என்று கூறினர்.

Intro:செல்போன் கதிர்வீச்சு காரணமாகக்கூட வாயில் 526 பற்கள் தோன்றி இருக்கலாம் என அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்Body:சென்னை ஆவடியில் வசித்து வரும் பிரபுதாஸ் என்பவரின் மகன் ரவீந்திரன். இவருக்கு சிறுவயதில் இருந்து வாயின் கீழ் தாடையில் வீக்கம் காணப்பட்டுள்ளது.இதற்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனை நாடியுள்ளனர்.ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.தற்போதுனவருக்கு 7 வயது ஆகவே வீக்கம் அதிகரித்து வலியும் அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது இதனால் பூந்தமல்லியில் உள்ள சவிதா பல் மறுத்துவனையில் அனுமதித்துள்ளானர் அவரது பெற்றோர். சிறுவன் ரவீந்திரனுக்கு பிரத்யேகமாக தாடையை மட்டும் பரிசோதிக்கும் சி.டி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது டார்கள் அதிர்ந்துபோயினர்.சிறுவயது வாயில் சிறிதும் பெரிதுமான வளர்சியடையாத பற்கள் இருப்பது தெரியவந்தது.பின்னர் மருத்துவர் ரமணி மற்றும் அவரது மருத்துவ நிபுணர் குழு ஒன்றரை மணிநேர அருவை சிகிச்சைக்கு பின்னர் 4×3 சென்டிமீட்டர் அளவுகொண்ட கட்டி ஒன்றை அகற்றினர்.அந்த கட்டியை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர்தான் தெரிந்தது 200கிராம் எடைகொண்டமொத்தம் 526 பற்கள் இருந்தது.Conclusion:இதுகுறித்து மருத்துவகுழு கூறுகையில் கடந்த 2014ம் ஆண்டு மும்பையில் 17 வயது சிறுவனுக்கு 232 பற்களை நீக்கியது சாதனையாக கூறப்பட்டது ஆனால் தற்போது சவிதா செய்துள்ளது உலகிலேயே முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது.மேலும் பேசிய அவர் இது போன்ற அரிதான பிரச்சனைகள் செல்போன் கதிர்வீச்சினாலும் ஏற்பட்டிருக்க பெருமளவு வாய்ப்புள்ளது என்வே இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஆரம்ப நிலையில் உள்ள இந்த ஆய்வில் 10சதவீதம் அளவுக்கு செல்போன் கதிர்வீச்சினால் உடல்நலம் சார்ந்த ஆபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.