சென்னை தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூர் காமராஜர் சாலையில் சரண் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்திவருகிறார். இந்தக் கடையில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் இரவு பணிமுடிந்து வீட்டிற்கு புறப்பட்டபோது அவரது செல்ஃபோனை காணவில்லை. இந்நிலையில், அந்தப் பெண் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை சோதித்து பார்த்தார்.
அதில், கருப்புச் சட்டை அணிந்த இளைஞர் கையில் காகிதத்துடன் கடையின் அருகில் நின்றிருந்தும், அந்தப் பெண் ஊழியர் கணினியில் வேலை செய்து கொண்டிருந்த போது அவர் லாவகமாக ஜெராக்ஸ் இயந்திரத்தின் அருகேயிருந்த 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்ஃபோனை திருடி சென்றதும் தெரிந்தது.
சிசிடிவியில் பதிவாகியிருந்த இந்தக் காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணும் கடையின் உரிமையாளரும் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து திருடிய நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: உலக பொருளாதாரத்தை ஆட்டம் காண செய்யும் கொரோனா: பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி