சென்னை: திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் இருந்து துப்பாக்கி முனையில் ஊழியரை கட்டிப்போட்டு 1.32 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக திருவான்மியூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ரயில்வே காவல் துறையினர், ரயில் நிலையத்திற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கட்டிப்போட்டதாக நாடகமாடி ரயில்வே ஊழியர் டீக்கா ராம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் பணத்தை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்து 1.32 லட்ச ரூபாயை மீட்டனர். இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த ரயில்வே காவல் துறையினரை, டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
குற்றவாளியை பிடிக்க உதவிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கைது செய்யப்பட்ட டீகாராமின் மனைவி, ஆட்டோவில் ரயில் நிலையத்திற்கு இறங்கி நடந்து செல்வது போன்று பதிவாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் துறையினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: PM Modi Stuck on Flyover: பதிண்டா விமான நிலையத்துக்கு உயிருடன் வந்தடைந்தேன்: பஞ்சாப் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி நன்றி