சென்னை: அய்யப்பன்தாங்கல் பகுதியில் மோசடி செய்த தனியார் நிதி நிறுவனத்தின் உரிமையாளராளரிடமிருந்து பணத்தை பெற கோவிந்தராஜ் என்பவர் உரிமையாளர் ரமேஷ்குமார் மற்றும் அவரது உறவினர் மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ்குமாரிடம் பலர் முதலீடு செய்துள்ளனர். கரோனா காலக்கட்டத்தில் நஷ்டம் அடைந்ததால் பெற்ற தொகையை திரும்பி தராமல் ஏமாற்றியுள்ளார்.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில், அந்த நிறுவனம் சம்பாதித்த சொத்துக்களை முடக்கி அதை விற்று கொடுக்கும்படி மதுரை நீதிமன்றம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அந்நிறுவனத்தின் உரிமையாளரான ரமேஷ் குமார் மற்றும் அவரது உறவினர் பிரசன்னாவை சிலர் காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக, அவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் சிவகாசியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தொடர்ந்து அடியாட்களை ஏவி மிரட்டி பணம் கேட்டும், பொய்யான வழக்குகளை என் மீது போட்டும் தொந்தரவு தருவதாக குறிப்பிட்டுள்ளார். இதே போல ஆகஸ்ட் 30ஆம் தேதி ரமேஷ்குமாருடன் அய்யப்பன்தாங்கலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு காரில் திரும்பும் போது, கோவிந்தராஜ் அவரது அடியாட்களுடன் வந்து சினிமா பாணியில் காரை மோதி பயங்கர ஆயுதங்களால் தாக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
அதோடு விபத்து தொடர்பான சிசிடிவி ஆதாரங்களை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதையும் படிங்க: தொழில்போட்டியின் காரணமாக சிசிடிவியை உடைத்தவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு