ETV Bharat / city

தேர்வு முறைகேடு - அடுத்தடுத்து சிக்கும் குற்றவாளிகள்! - அரசுப் பணியாளர் தேர்வாணையம்

சென்னை: குரூப் 4 மற்றும் குரூப் 2A தேர்வு முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி காவல்துறை மேற்கொண்டுவரும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அடுத்தடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

investigation
investigation
author img

By

Published : Feb 3, 2020, 12:43 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணையை மாநிலக் குற்றப்புலனாய்வு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இம்முறைகேடு தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டும், ஒரு சிலர் தேடப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு நடந்த குரூப் 2A தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகவும், 42 பேர் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாகவும் தேர்வாணையம் தரப்பில் சி.பி.சி.ஐ.டியிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தனி வழக்காகப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர், முறைகேடு செய்து தேர்ச்சி பெற்ற 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளான ஜெயக்குமார், காவலர் சித்தாண்டி உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணியை சி.பி.சி.ஐ.டி தனிப்படை தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே, குரூப் 2A தேர்வு முறைகேட்டில் கைதான 5 பேரை தவிர்த்து மீதமுள்ளவர்களில் 20 க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களின் செல்போன் எண்கள் மூலம் யார் யாரை தொடர்பு கொண்டுள்ளனர், அவர்களுக்கு வெளியில் இருந்து உதவி செய்பவர்கள் யார் என்பன உள்ளிட்ட தகவல்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்குத் தொடர்பாக இன்று எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில், தேர்வு எழுதியவர்கள் 10 பேரை காவல்துறையினார் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 2 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: டிஎன்பிசியில் முறைகேடு - விசாரிக்க பெண்ணை அழைத்துச் சென்ற சிபிசிஐடி

Intro:Body:டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். குரூப்-4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு நடந்த குரூப்-2A தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகவும், 42 பேர் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாகவும் டி.என்.பி.எஸ்.சி தரப்பில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணையை துவங்கிய சி.பி.சி.ஐ.டி போலீசார், முறைகேடு செய்து தேர்ச்சி பெற்ற 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளான ஜெயக்குமார், காவலர் சித்தாண்டி உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை தேடும் பணியை சி.பி.சி.ஐ.டி போலீசார் தனிப்படை அமைத்து தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் குரூப்-2A தேர்வு முறைகேட்டில் கைதான 5 பேரை தவிர்த்து மீதமுள்ளவர்களில் 20 க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் செல்போன் எண்கள் மூலம் யார் யாரை தொடர்பு கொண்டுள்ளனர்? அவர்களுக்கு வெளியில் இருந்து உதவி செய்பவர்கள் யார் என்பன உள்ளிட்ட தகவல்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக இன்று எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து தேர்வு எழுதியவர்கள் 10 பேரை சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 2 பேரை சிபிசிஐடி போலீசார் பிடித்துள்ளனர். அவர்களை சிபிசிஐடி போலீசார் சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.