ETV Bharat / city

ரயில் முன்பு தள்ளி மாணவி படுகொலை வழக்கு.. சிபிசிஐடி விசாரணை

ரயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யஸ்ரீ வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று அவர் வசித்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் விசாரணை மேற்கொண்டனர்.

சிபிசிஐடி விசாரணை
சிபிசிஐடி விசாரணை
author img

By

Published : Oct 17, 2022, 3:45 PM IST

கடந்த 13ஆம் தேதி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யஸ்ரீ ரயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக நேற்று முன்தினம் (அக்.15) சிபிசிஐடி காவல்துறையினர், சென்னை டிஎஸ்பி செல்வகுமார் மற்றும் புருஷோத்தமன் தலைமையிலான ஐந்து பெண் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடமான சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தடவியல் துறை வல்லுனர்களை வரவைத்து தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சத்யஸ்ரீ தாயார் ஏற்கனவே மாம்பலம் மற்றும் பரங்கிமலை காவல் நிலையத்தில் குற்றவாளி சதீஷ் மீது புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாம்பலம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை பிரிவு 75 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரங்கிமலை காவல் நிலையத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் சமரசம் பேசி அனுப்பி உள்ளனர். இதுகுறித்து நேற்று (அக்.16) மாம்பலம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருந்தது. அதில் தன் மகள் சத்யஸ்ரீ, சதீஷ் தாக்கியதாக புகார் அளித்த நிலையில் வெறும் வாய் தகராறு ஏற்பட்டதாக மட்டுமே மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டு காவல் நிலையங்களிலும் புகார் அளித்தும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர். அதன் அடிப்படையில் இன்று (அக்.17) சத்யஸ்ரீ வசித்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவியின் தாய் ராமலட்சுமி, சத்யஸ்ரீயின் தோழிகள் மற்றும் சம்பவத்தன்று ரயிலை இயக்கிய ஓட்டுநர் கோபால் என்பவரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

இதையும் படிங்க: ஆபாச வீடியோ காசியின் வெளிநாட்டு கூட்டாளி கைது.. குவைத்திலிருந்து திரும்பியதும் பிடித்த போலீசார்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.