சென்னை: 103 கிலோ தங்கம் திருடப்பட்ட வழக்கில், தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் தயாரித்த நிறுவனத்திடம் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
லாக்கரில் இருந்த தங்கம் கள்ளச் சாவி போட்டு திருடப்பட்டது தெரியவந்துள்ள நிலையில், லாக்கர் தயாரித்தபோது எத்தனை அசல் சாவி வழங்கப்பட்டது, அதன் பின் போலி சாவி தயாரிக்கப்பட்டதா? என்பதை அறிய லாக்கர் நிறுவனத்திடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும், சீல் வைக்கப்பட்ட 3 லாக்கருக்கான 12 சாவிகளை மட்டும் கைப்பற்றாமல், அந்தக் கட்டடம் முழுவதுமுள்ள லாக்கர்கள், அறைகள் ஆகியவற்றின் 70க்கும் மேற்பட்ட சாவிகளை பறிமுதல் செய்தது ஏன் என்றும் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.
லாக்கர் திறக்கப்பட்ட விவகாரத்தில் தடயவியல் துறை வல்லுனர்கள் குழு சம்பவ இடத்தையும், லாக்கரின் மாதிரிகளையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.