சென்னை: சேப்பாக்கம் அருகே பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் ஜன.28ஆம் தேதி திருமுருகன் காந்தி, ஜி.ராமகிருஷ்ணன், விசிகவின் திருப்போரூர் எம்எம்ஏ பாலாஜி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.
அதில் திருவண்ணாமலை மாவட்டம், வீரளுர் பகுதியில் கடந்த ஜன.17ஆம் தேதி நடந்த சாதிக் கலவரத்தைப் பற்றி தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
சாதியக் கலவரம்
திருமுருகன் காந்தி கூறுகையில், வீரளுர் பகுதியில் ஜன.17ஆம் தேதியன்று ஒரு பெண்மணி இறந்துள்ளார். அவர் உடலை பொது பாதையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை என்றால் மொத்த அரசியல் கட்சியினரை அங்கு அழைத்துச் சென்று நடவடிக்கை எடுப்போம்.
அந்தக் கலவரம் திட்டமிட்டு நடைபெற்றது. இதுகுறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது தொடர்கதையாக மாறிவிடும். இதுதொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிய நிவாரணம்
மேலும், பாதிக்கப்பட்ட இடத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இதுவரை சந்திக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பொது சாலையில் பொது மக்கள் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில், பள்ளி மாணவி இறப்பு குறித்து பொய்யான தகவலை வெளியிட்ட பாஜக மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற விவகாரங்களில் பாஜக தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டுகிறது என்றார்.
முதலமைச்சர் கவனம் தேவை
ஜி ராமகிருஷ்ணன் பேசுகையில், கலவரம் நடந்த இடத்தில் அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த இடங்களில் உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.
இறந்தவர் உடலை பொதுவெளியில் எடுத்துச் சென்று அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அங்கு சென்று அவர் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.
விசிகவின் திருப்போரூர் சட்ட மன்ற உறுப்பினர் பாலாஜி கூறுகையில், இந்த கலவரம் குறித்து முதலமைச்சரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக முதலமைச்சர், இந்த கலவரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: UP POLLS: இஸ்லாமியர்கள் அதிகம்; ஆதிக்கம் செலுத்தும் பாஜக - வாரணாசி தெற்கு தொகுதி ஓர் பார்வை