ETV Bharat / city

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 287 பேர் மீது வழக்கு பதிவு - சென்னை போக்குவரத்து காவல்துறை - சென்னை போக்குவரத்து காவல்துறை

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 287 பேர் மீது சென்னை போக்குவரத்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது

குடிபோதையில் வாகனங்கள் ஓட்டிய 287 பேர் மீது வழக்கு பதிவு

author img

By

Published : Jun 21, 2022, 11:53 AM IST

சென்னை மாநகரில் விபத்துகளை குறைக்கும் வகையில் போக்குவரத்து விதிகளை அமல்படுத்த சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சாலை விபத்துக்களில் ஈடுபடும் அல்லது உயிரிழக்கும் நபர்கள் குடிபோதையில் தங்கள் வாகனங்களை ஓட்டுவது கவனத்திற்கு வந்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் அவர்களது உயிருக்கு மட்டுமின்றி, மற்ற வாகன ஓட்டிகள் அல்லது சாலையில் பயணிப்பவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர்.

எனவே 18.06.2022 மற்றும் 19.06.2022 ஆகிய தேதிகளில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிவதற்காக பிரத்யேகமாக சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. இந்த சிறப்பு வாகன தணிக்கையில் மொத்தம் 287 பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டியது கண்டறியப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

குடித்து விட்டு கார் ஓட்டியதாக 67 பேர் மீதும், குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 197 பேர் மீதும், குடிபோதையில் ஆட்டோக்கள் ஓட்டியதாக 11 பேர் மீதும், பிற வாகனங்களை குடிபோதையில் ஓட்டியதாக 12 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் அவர்களின் உரிமம் போக்குவரத்து அதிகாரிகளால் இடைநீக்கம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்றும், இந்த தணிக்கை மேலும் தொடரும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் என்றும், அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: எம்எல்ஏக்களுக்கு பேருந்துகளில் படுக்கை வசதி வழங்க அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.