ETV Bharat / city

ஈபிஎஸ் - ஓபிஎஸ்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி! - சென்னை உயர் நீதிமன்றம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Case against the AIADMK co Ordinator election dismissed by MHC, ஈபிஎஸ் ஓபிஎஸ் எதிரான வழக்கு தள்ளுபடி
Case against the AIADMK co Ordinator election dismissed by MHC
author img

By

Published : Dec 14, 2021, 12:51 PM IST

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அலுவலகம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவித்தது.

அதிமுக கட்சி விதிப்படி 21 நாட்கள் அவகாசம் வழங்காமல் தேர்தல் நடத்தப்படுவதால், முடிவுகளை அறிவிக்க தடைவிதிக்க கோரி ஓசூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்

அவர் தனது மனுவில், இந்த தேர்தலில் போட்டியிட யாருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை என்றும் 1 கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ள நிலையில், முறையாக வாக்காளர் பட்டியல் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் செயல்படுவதாகக் கூறி, தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இருவரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

நீதிபதிகளின் கேள்வி

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது, 'உள்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பங்கு. எந்த பங்கும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்ததால் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு விளக்கமளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பதிவுசெய்யப்பட்ட கட்சியில் நடந்தப்பட்ட தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை என்பதாலும், ஜனநாயகம் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான். வாக்குரிமை என்பது அரசியல் சட்ட உரிமை" என்றார்.

அரசியல் சாசனத்தின் ஜனநாயக உரிமையை மீறி செயல்படும்போது அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்பதற்கான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு தள்ளுபடி

மேலும், தேர்தலுக்கு முந்தைய நாள், போட்டியின்றி இருவரை தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்ததையும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை கடந்த டிசம்பர் 7ஆம் தேதி நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று (டிசம்பர் 14) தீர்ப்பளித்தனர். அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்ததை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல் - ஓபிஎஸ் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.