தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் நான்காம் தேதியன்று தமிழ்நாடு அரசு மூடப்பட்ட டாஸ்மாக் கடை மே 7ஆம் தேதி திறக்கவுள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
காணொலி மூலம் நடந்த விசாரணையில் தமிழ்நாடு அரசுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இன்று பிற்பகல் 2:30 மணிக்கு விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இதையும் படிங்க:
கள் விற்பனை அமோகம்; டாஸ்மாக் மூடலால் இயற்கை பானத்தை நாடும் குடிமகன்கள்!