சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் இருச்சக்கர வாகனத்தில் இளைஞர்கள் சென்று கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலையடுத்து, அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் விஜயராகவன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இன்று காலை அம்பத்தூர் எஸ்டேட், கலைவானர் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை மறித்து சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, அவர்கள் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபேசவுத்ரி(46), திருநெல்வேலியைச் சேர்ந்த மகேஷ் குமார்(22), சுவர்ன வேலாயுதம்(22) எனத் தெரியவந்தது.
இளம்பெண் கணவருடன் செல்போனில் பேசியபோது உயிரிழந்த சோகம்!
இதில் சுபே சவுத்ரி அயப்பாக்கத்தில் தங்கி அம்பத்தூர் எஸ்டேட்டில் தேனீர் கடை நடத்தி வந்துள்ளார். இவரை தவிர்த்து வேறிருவரும், அம்பத்தூர் பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இருவரும் சுபேசவுத்ரி கடைக்கு செல்லும் போது அறிமுகமாகியுள்ளனர். அப்போது கஞ்சா விற்பனை செய்வது குறித்து சுபேசவுத்ரி தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியரிடம் 1.8 லட்சத்தை கொள்ளையடித்த ஏடிஎம் கொள்ளையன் -வெளியான சிசிடிவி காட்சி
ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து இருசக்கர வாகனத்தில் சென்று அம்பத்தூர், ஆவடி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதியிலுள்ள தனியார் கல்லூரிகளில் பயிலும் வடமாநில இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி தற்போது வேலை செய்யும் இடத்தில் போதிய வருமானம் இல்லை என்பதாலும், தங்கியிருக்கும் அறைக்கு வாடகை கொடுக்க முடியாததாலும், தனது சொந்த ஊரில் உள்ள பெற்றோருக்கு மாதந்தோறும் பணம் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டதாலும் பகுதிநேரமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து ஒரு கிலோ 300கிராம் கஞ்சா, ரூ.7000 பணம், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், மூவரையும் சிறையிலடைத்தனர்.