ETV Bharat / city

'சித்த மருத்துவம் மூலம் கரோனாவைக் குணப்படுத்த முடியுமா என்பது குறித்த ஆய்வுகள் நடைபெறுகின்றன' - Coronavirus treatment

சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளின் மூலம் கரோனாவைத் தடுக்க முடியுமா, என்பது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Can Siddha cure corona
Can Siddha cure corona
author img

By

Published : Jul 23, 2020, 7:55 PM IST

சித்த மருத்துவர் தணிகாசலம் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், மத்திய ஆயுஷ் அமைச்சகம், தமிழ்நாடு அரசு ஆகியவற்றிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. சித்த மருத்துவத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்துள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகம், கடந்த 10 ஆண்டுகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட துறைகளுக்கு 239 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கரோனா சிகிச்சைக்கு கபசுரக் குடிநீர், நொச்சி குடிநீர், திப்பிலி ரசாயனம் உள்ளிட்ட மருந்து வகைகளின் திறன் குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்துவருவதாகவும் சித்தா, யுனானி, ஆயுர்வேத மருந்துகளின் மூலம் கரோனாவைத் தடுக்க முடியுமா என்பது தொடர்பான தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், சித்த மருத்துவத்தின் மூலம் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனுவில், "மத்திய ஆயுஷ் அமைச்சக வழிகட்டுதலின் பேரில் கரோனா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ முறைகளைப் பயன்படுத்த முடியுமா என்று ஆய்வுசெய்ய இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு அரசு, குழு ஒன்றை அமைத்துள்ளது.

அக்குழு அளித்த பரிந்துரையை ஏற்று தற்போது 'ஆரோக்யம்' என்ற பெயரில் ஆயுர்வேதா, சித்தா, யோகா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளை உள்ளடக்கி கரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மருந்துகள் வழங்கப்பட்டுவருகின்றன.

அதேபோல, ஆறு சித்த மருத்துவர்கள் கரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக அரசிடம் தெரிவித்தனர். அவற்றைப் பரீசிலித்தபோது, மருந்து குறித்த நம்பகத்தன்மையையும் செய்முறை குறித்த உரிய விளக்கத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இந்திய மருத்துவ முறை சார்ந்த மருந்துகளைக் கொள்முதல் செய்ய ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு 23 கோடி ரூபாய் செலவு செய்துவருகிறது. கர்ப்பமடைந்த பெண்களின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றவும் குழந்தைகள் இறப்பைத் தடுக்கவும் தாய்மார்களுக்கு 'அம்மா மகப்பேறு சிரஞ்சீவி பெட்டகம்' வழங்கப்பட்டுவருகிறது.

மேலும், பட்ஜெட்டில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவத் துறைக்காக 184 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துவருகிறது. 2019ஆம் ஆண்டு மட்டும் மூன்று கோடியே 95 லட்சத்து 59 ஆயிரத்து 598 பேர் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறையில் சிகிச்சை பெற்றுள்ளனர். டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களின்போது மூன்று கோடியே 12 லட்சத்து 70 ஆயிரத்து 93 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு முழுக்க முழுவீச்சில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.

சென்னை, அரும்பாக்கம், வியாசர்பாடி ஆகிய இடங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரேத்யேகமாக சித்த மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் கரோனா நோயளிளுக்கு சித்த மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய, மாநில அரசுகளின் பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கிருபாகரன், வி.எம். வேலுமணி அடங்கியோர் கொண்ட அமர்வு, இந்த வழக்கை ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: நீதிமன்ற ஊழியர்களுக்கு பேருந்து சேவை நிறுத்தம் - மாவட்ட ஆட்சியரிடம் மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.