ETV Bharat / city

நடத்துநரை பஞ்சராக்கிய புரோட்டா மாஸ்டர்! - பேருந்து நடத்துனர்

சென்னை: பேருந்தின் படியில் பயணம் செய்யக் கூடாது என எச்சரித்த நடத்துநரை தாக்கிய புரோட்டா மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.

chennai
author img

By

Published : Apr 29, 2019, 3:03 PM IST

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வகுமார் (25) . இவர் புரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறார். செல்வகுமார் நேற்று மாலை 15 எஃப் மாநகரப் பேருந்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏறி சிறிது தூரம் படிக்கட்டில் பயணம் செய்தார். அப்போது, பேருந்து நடத்துநரான திருவள்ளூர் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த தனசிங் (42) படிக்கட்டில் பயணம் செய்த செல்வகுமாரை பேருந்தின் உள்ளே வரச் சொன்னார்.

அதற்கு புரோட்டா மாஸ்டர் செல்வகுமார், 'என்னால் வர முடியாது' என தனசிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, திடீரென நடத்துநர் தனசிங்கை செல்வகுமார் தாக்கி மாநகரப் பேருந்தில் இருந்து கீழே தள்ளினார்.

chennai

இதில் தனசிங்குக்கு கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்திற்கு பொது மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ராஜ்குமார் செல்வகுமாரை கைது செய்தனர். மேலும் அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் பஸ் கண்டக்டரை தாக்கிய பரோட்டா மாஸ்டர் கைது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த செல்வகுமார் 25 .இவர் பரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறார்.

இவர் நேற்று மாலை 15 F மாநகர பேருந்தில் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் ஏறி சிறிது தூரம் பேருந்தில் படிக்கட்டு வழியாக பயணம் செய்தார்.

பேருந்து கண்டக்டர் திருவள்ளூர் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த தனசிங் வயது 42.இவர் மாநகரப் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த செல்வகுமாரை மேல வர சொன்னார்.

அதற்கு செல்வகுமார் மேலே என்னால் வர முடியாது என்று கண்டக்டர் தனசிங் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திடீர் என்று செல்வகுமார் கண்டக்டர் தனசிங்கை தாக்கி மாநகர பேருந்தில் இருந்து கீழே தள்ளினார்.

இதில் கண்டக்டர் தனசிங் என்பவருக்கு கால் முட்டியில் பலத்த படுகாயம் ஏற்பட்டது.

உடனே கோயம்பேடு காவல் நிலையத்திற்கு பொது மக்கள் தகவல் கூறியுள்ளனர்.

பின்பு சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ராஜ்குமார் கண்டக்டரை தாக்கிய செல்வகுமாரை கைது செய்தனர்.

மேலும் கைது செய்த பரோட்டா மாஸ்டர் செல்வகுமார் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்து கோயம்பேடு போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.