ETV Bharat / city

விதிமுறைகளை மீறி கட்டும் கட்டடங்கள் சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

அனுமதிக்கப்பட்ட திட்ட வரைபடத்தின்படி கட்டடங்களை கட்டாமல் விதிமுறைகளை மீறும் கட்டப்பபடும் கட்டடங்கள் சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 22, 2022, 11:48 AM IST

சென்னை: சென்னையில் 2665 கட்டடங்களின் கட்டுமானத்தை நிறுத்த கட்டட உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி குறிப்பாணை வழங்கியுள்ளது. அதில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதியை சென்னை மாநகராட்சியின் நகரமைப்பு துறை வழங்கி வருகிறது.

திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி பெறுபவர்கள் குறிப்பிட்ட அளவு மற்றும் விவரக் குறிப்பின் அடிப்படையில்தான் கட்டடங்களை கட்ட வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை கண்டறிந்து மாநகராட்சியின் சார்பில் குறிப்பாணை வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விதிமீறல்களை திருத்திக் கொள்ளாத கட்டட உரிமையாளர்களுக்கு தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி சீல் வைக்க குறிப்பானை வழங்கப்பட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவிற்க்கு பிறகு பூட்டி சீல் வைக்கப்படும்.

அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உதவி பொறியாளர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரையில் மட்டுமே பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட மற்றும் கட்டட அனுமதிக்கு மாறாக விதி மீறி கட்டப்பட்ட 2665 கட்டடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டுமான பணிகளை நிறுத்த குறிப்பாணை வழங்கி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விதி மீறல்களை திருத்திக் கொள்ளாத 2403 கட்டட உரிமையாளர்களின் கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்க குறிப்பானை வழங்கப்பட்டுள்ளது. இதில் 39 கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட திட்ட வரைபடத்தின்படி கட்டடங்களை கட்ட வேண்டும். விதிமுறைகளை மீறும் கட்டடங்கள் மீது மூடி சீல் வைப்பதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: காருண்யா நிகர் நிலை பல்கலைக்கழகத்திற்கு A++ மதிப்பீடு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.