ETV Bharat / city

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி - அழைப்பு விடுத்த திமுக!

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நூல் வெளீயிட்டு விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோர் வருகிற 23ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெறவுள்ள பேரணிக்கு அனைவரும் வருமாறு அழைப்பு விடுத்தனர்.

'அண்ணா அறிவுக் கொடை' என்னும் நூல் வெளியீட்டு விழா
'அண்ணா அறிவுக் கொடை' என்னும் நூல் வெளியீட்டு விழா
author img

By

Published : Dec 22, 2019, 2:47 PM IST

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் 'அண்ணா அறிவுக் கொடை' என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நூலின் முதல்படியை ஸ்டாலின் வெளியிட, வைகோ பெற்றுக்கொண்டார்.

பேரணிக்கு அழைப்புவிடுத்த வைகோ!

இந்நிகழ்ச்சியில் அண்ணாவின் நினைவுகள் பற்றி விரிவாகப் பேசிய வைகோ, "தமிழர்கள் எந்தவித அடக்குமுறைக்கும் அஞ்சாதவர்கள்; பல போராட்டங்களில் ரத்தம் சிந்தி மானம் காத்தவர்கள்; அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நாளை மறுநாள் நடக்கவிருக்கும் பேரணிக்கு வாருங்கள்" என்று அழைப்புவிடுத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக பேரணிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டாலும் கண்டனப் பேரணி நடைபெறும் எனத் தெரிவித்தார்.

'அண்ணா அறிவுக் கொடை' என்னும் நூல் வெளியீட்டு விழா

மத்திய, மாநில அரசுக்கு வீரமணியின் அறிவுரை!

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசுகையில், "அண்ணா, கருணாநிதி ஆற்றிய பணியை திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது செய்துவருகிறார். அண்ணாவின் ஆழமான கருத்துகளை மொத்தமாகத் தொகுத்து மிக அருமையாக நூலில் பதிவு செய்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இந்த நூலை படித்து தெரிந்துகொள்ள வேண்டும். அண்ணா என்றும் தனது கொள்கையில் சமரசம் செய்துகொண்டது கிடையாது" என்றார்.

நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின், வைகோ, வீரமணி பேச்சு

'நீண்ட நாள் கனவு நிறைவேறியது' - ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், "நான் இதை ஒரு புத்தக விழாவாகக் கருதவில்லை. கருணாநிதியின் நீண்டநாள் கனவான அண்ணாவின் பேச்சுகள் தொகுப்பாக வெளிவர வேண்டும் என்னும் கனவை நிறைவேற்றிய விழாவாகக் கருதுகிறேன். நம் அனைவரையும் இணைக்கும் சக்திகள் தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர்.

வருகின்ற 23ஆம் தேதி மட்டுமல்ல குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும்வரை திமுக போராட்டம் தொடரும். அண்ணா பெயரில் கட்சி வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு அதிமுக அரசு துரோகம் செய்துவருகிறது" என்று கூறினார்.

இதையும் படிங்க:

மத்திய அரசு பின்வாங்கும் வரை போராட்டம் தொடரும்: திருமா!

Intro:Body:சென்னை அண்ணா அறிவாலயத்தில்
கலைஞர் அரங்கில் 'அண்ணா அறிவுக் கொடை' என்னும் நூல் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் வீரமணி தலைமை தாங்க, திமுக தலைவர் ஸ்டாலின் நூல் வெளியீட்டு பேருரை வழங்க, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார்.

நூலின் முதல் படியை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெற்றுக்கொண்டார்.

மேடையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், அண்ணாவின் நினைவுகள் பற்றி விரிவாக பேசிய அவர், எந்த வித அடக்குமுறைக்கும் அஞ்சாத தமிழர்கள் பல போராட்டங்களில் ரத்தம் சிந்தியுள்ள தமிழர்கள் நாளை மறு நாள் நடக்க இருக்கும் பேரணிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ திமுக பேரணிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டாலும் கண்டன பேரணி நடைப்பெறும் என தெரிவித்தார்.

தொடர்ந்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசுகையில், அண்ணா, கலைஞர் எந்த பணியை செய்தாரோ திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது செய்து வருகிறார் என தெரிவித்தார். அண்ணாவின் ஆழமான கருத்துகளை மொத்தமாக தொகுத்து மிக அருமையாக நூலில் பதிவு செய்துள்ளனர். மத்திய, மாநில அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இந்த நூலை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அண்ணா என்றும் தனது கொள்கையில் சமரசம் செய்து கொண்டது கிடையாது என தெரிவித்தார்.

இறுதியாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், நான் இதை ஒரு புத்தக விழாவாய் கருதவில்லை கலைஞரின் நீண்ட நாள் கனவான அண்ணாவின் பேச்சுக்கள் தொகுப்பாக வெளிவர வேண்டும் என்னும் கனவை நிறைவேற்றிய விழாவாக கருதுகிறேன் என தெரிவித்தார். நம் அனைவரையும் இணைக்கும் சக்திகள் தலைவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் ஆவார்கள்.

மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில், அண்ணாவின் தேவை இன்றும் தேவைப்படுகின்றது என தெரிவித்தார். அண்ணா காலத்தைவிட தற்போது நமக்கு எதிரிகள் அதிகமாக உள்ளனர் என தெரிவித்த அவர், என்ன காரணம்? தமிழர்கள் படித்து தெளிந்து உள்ளனர் என கூறினார். இந்தி,சமஸ்கிருத திணிப்பு, தற்போது ஈழத்தமிழர்களுக்கும், சிறுபான்மையினர்களுக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது அதையும் நாம் எதிர்க்கின்றோம். வருகின்ற 23ஆம் தேதி மட்டும் அல்ல குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறும்வரை திமுக போராட்டம் தொடரும் என தெரிவித்தார். மேலும் அதிமுக பாமக பச்சை துரோகம் செய்துள்ளது. நாடே பற்றி எரியத் அதிமுக கூட்டணியை காரணம் என சாடினார். அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொண்டு துரோகம் செய்துள்ளது என குற்றம்சாட்டினார். மத்தியா, மாநில அரசுகளால் மாநிலத்தில் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது என பேசினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.