ETV Bharat / city

சிபிஐ அலுவலகத்தில் கருப்பு ஆடுகள் - சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

வேலியே பயிரை மேய்ந்தது என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி, அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் சிபிஐ அலுவலர்களே மாபெரும் குற்றத்தை செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

cbi
cbi
author img

By

Published : Dec 25, 2020, 1:16 AM IST

காவலர்கள் எவ்வளவு பெரிய குற்றத்தையும் அல்லது திருட்டுக்களையும் கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுக்கும் தலையாய பணியை செவ்வனே செய்து வருகின்றனர். ஆனால், அதிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன. சமீப காலமாக இப்படிப்பட்ட கருப்பு ஆடுகள் உளவுத்துறை/காவல்துறையில் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் புகழ்பெற்ற மத்திய புலனாய்வுத்துறை துறையில் இதுபோன்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இத்துறையின் வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமாகியுள்ளது. இந்த திருட்டை கண்டுபிடித்த சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ அலுவலர்கள் மீது தமிழ்நாட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாயமான 103 கிலோ தங்கத்தை கண்டுபிடிக்கவும் அதற்கு காரணமான அலுவலர்களையும் கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 400.07 கிலோ தங்கம், நகைகளை சென்னை பாரிமுனையில் உள்ள புகழ்பெற்ற சுரானா ஜுவல்லரியில் (சுரானா கார்ப்பரேஷன்) சிபிஐ பறிமுதல் செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்தது. மெட்டல்ஸ் அண்ட் மினரல்ஸ் டரேடிங் கார்ப்பரேஷனில் பணியாற்றிய அலுவலர்களுக்கு எதிராக நடைபெற்ற ஊழல் வழக்கு விசாரணையின் போது, அந்த அலுவலர்கள் சுரானா கார்ப்பரேஷனுக்கு சாதகமாக செயல்பட்டதாக தெரியவந்தது. அதன்பின்பு நடந்த சோதனையில் சிபிஐ அலுவலர்கள் நகைகளை பறிமுதல் செய்து லாக்கரில் வைத்துள்ளனர்.

2013ஆம் ஆண்டு சுரானா நகை கடை வெளிநாடு வர்த்தகம் சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திடம் கைப்பற்றப்பட்ட தங்கங்களை டைரக்டர் ஜெனரல் ஆப் ஃபாரின் டிரேட் அலுவலகத்துக்கு மாற்றக்கோரி விண்ணப்பம் செய்தது. அந்த மனுவில் இந்த வழக்கு முடிந்துவிட்டதாகவும் தங்க நகைகளின் உரிமையாளர் யார் என்பது ஊழல் வழக்கு முடியும் போது தெரியவரும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ வாதாடியது. ஆனால், சுரானா கார்ப்பரேஷன் மேல்முறையீடு செய்த பின்பு தான் மெகா ஊழல் மற்றும் தங்கம் மாயமானது தெரியவந்தது.

மேல்முறையீட்டில், தங்கத்தை தங்களிடம் திருப்பித் தரவேண்டும் என்றும் பல வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தது. அதனடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் கைப்பற்றப்பட்ட தங்கங்களை வங்கிகளுக்கு மாற்றம் செய்ய அறிவுறுத்தியது. இதனிடையே கம்பெனி திவாலானது குறித்த நடைமுறைகளும் தொடங்கின.

மொத்த தங்கக் கட்டிகளின் எடை 400.07 கிலோவாகும். தனிநபர் முன்நிலையில் இவை எடைபோடப்பட்டது. இவை சுரானா கார்ப்பரேஷனில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டு அவற்றுக்கு 72 பூட்டுகள் போடப்பட்டன. தங்கத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்திய அலுவலர்களிடம் ஒப்படைக்கும்போது 103 கிலோ தங்கம் எடை குறைவாக இருந்தது. இதனால், அவை மாயமானதாக கருதப்பட்டது. லாக்கரில் வைக்கப்பட்டபோது நகைகள் ஒன்றாக வைத்து எடை போடப்பட்டது. ஆனால், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வசம் ஒப்படைக்கும் போது அவை தனித் தனியே எடை போடப்பட்டது.

நகைகள் மாயமானது குறித்து தமிழ்நாடு காவல்துறையினர் விசாரிக்கக் கூடாது. மாறாக அண்டை மாநில காவல் துறையினரோ அல்லது சிபிஐ அலுவலர்களோ அல்லது NIAஐ சேர்ந்தவர்கள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ கோரியது. சிபிஐயின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், சிபிஐக்கு சிறப்பு சலுகைகள் ஏதும் இல்லை என தெரிவித்தனர். மேலும், காவல்துறையினரை நம்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறினர்.

இது குறித்து உயர் நீதிமன்ற கூறுகையில், "சிபிஐ அலுவலர்கள் இந்த வழக்கில் நிரபராதியாக வெளியே வந்தால், அவர்களின் கவுரவம் இரண்டு மடங்கு உயரும். இல்லை என்றால் சிபிஐ அலுவலர்கள் தண்டனைக்கு தயாராக இருக்க வேண்டும். சிபிஐ அலுவலர்கள், சிபிஐயின் கண்ணியம் மற்றும் நற்பெயரை பாதுகாக்க மறந்துவிட்டனர்.

2005இல் இருந்து 2015 வரை 60 லட்சம் கிலோ போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவற்றில் 16 லட்சம் கிலோ அழிக்கப்பட்டது என்று நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. ஆனால் மீதியுள்ள போதைப்பொருள்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு போதை தடுப்புப் பிரிவின் கீழ் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விலை உயர்ந்த பொருள்கள் மாயமாகின. இவை அனைத்துக்கும் காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள்தான் காரணம் என்று தெரியவருகிறது. இதுபோன்ற குற்றங்கள் ஏற்கனவே நடைபெற்றதால் சிபிஐ வசம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பது ஆபத்தாக முடியும். குஜராத் மாநிலம் ஜாம்நகர் கஸ்டம்ஸ் டிபார்ட்மெண்டிடம் இருந்து சமீபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்கம் மாயமானது. விசாரணை செய்யும் அலுவலர்களின் தலைமையிடத்தில் ஊழல் மலிந்துள்ளது. அவர்களின் நடவடிக்கை நம்பும்படியாக இல்லை. கைப்பற்றப்பட்ட பொருள்கள் யாரிடம் இருக்கிறது என்றும் எங்கு இருக்கிறது என்றும் தெரிவில்லை" என்று நீதிபதி கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.