ETV Bharat / city

பியூஸ் மானுஷுடன் ஏற்பட்டது தள்ளுமுள்ளு... யாரும் அவரை அடிக்கவில்லை - தமிழிசை - பியூஸ் மானுஷுடன் தள்ளுமுள்ளு

சென்னை: பியூஸ் மானுஷ் அத்துமீறி அலுவலகத்துக்குள் நுழைந்ததால்தான் தள்ளுமுள்ளு ஏற்பட்டதே தவிர, யாரும் அவரை தாக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்
author img

By

Published : Aug 30, 2019, 10:53 PM IST

சென்னையில் பாஜக சார்பில் காஞ்சி கோட்ட மண்டலங்களின் தேர்தல் பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. பாஜகவின் காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் பங்குபெற்ற இக்கூட்டத்தில், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “ 370 சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீரில் மறுசீரமைப்பு ஏற்படுத்தியதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் 370 சிறிய கூட்டங்களும், 35a பிரிவை நீக்கியதை குறிக்கும் வகையில் 35 மிகப் பிரம்மாண்ட கூட்டங்களும் பாஜக சார்பில் நாடு முழுவதிலும் நடத்தப்படவுள்ளது. காஷ்மீர் விவகாரத்தை வேண்டுமென்றே அரசியல் காரணங்களுக்காக, திமுக போன்ற கட்சிகள் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

பியூஸ் மானுஷ் பாஜக அலுவலகத்தில் நுழைந்தது குறித்து மற்றவர்களெல்லாம் ஏதோ சத்தியாகிரகம் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாஜக தொண்டர்கள் தானாக முன்வந்து வன்முறையில் ஈடுபடவில்லை. வேண்டுமென்றே வரம்பு மீறி அலுவலகத்தில் புகுந்ததால் தான், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. சாதி கலவரத்தைக் கட்டுப்படுத்துவது காவல்துறையினர் கடமை. திமுக தலைவர் ஸ்டாலின் பல வருடமாகத் தலைவர் பதவி கிடைக்கும் என்று கலைஞர் இருக்கும்போதே எதிர்பார்த்தார்.ஆனால், கலைஞர் இறந்த பிறகுதான் கிடைத்தது. இருந்தும் என்ன சாதனை செய்துவிட்டார். வெளிநடப்பு செய்வதெல்லாம் ஒரு சாதனையா?”, என்று கூறினார்.

Intro:ஸ்டாலினுக்கு கிடைக்காமல் கிடைத்த பதவியை கொண்டாட வேண்டியதுதான் கலைஞர் இருக்கும்போதே கிடைக்கும் என எதிர்பார்த்தால் ஆனால் கலைஞர் இறந்த பிறகுதான் கிடைத்தது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

Body:சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கறை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் காஞ்சி கோட்ட மண்டல் கலின் தேர்தல் பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டம் நடைபெற்றது

பாரதிய ஜனதா கட்சி காஞ்சி மாவட்ட வட்ட பகுதி நிர்வாகிகள் பங்கு பெற்ற இக்கூட்டத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்

பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில் பாஜக சார்பில் கட்சி ரீதியாக அமைப்பு ரீதியாக மற்றும் தேர்தல் நடைமுறை ஆகியவற்றிற்காக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று நடைபெறுகிறது

370 சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீரில் மறுசீரமைப்பு ஏற்படுத்தியதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது எனவும்

இந்தியா முழுவதும் 370 சிறிய கூட்டங்களும் 35a பிரிவை மனதில் வைத்துக்கொண்டு 35 மிக பிரம்மாண்ட கூட்டங்களும் தமிழகத்தில் பாஜக சார்பில் 57 மாவட்டங்களிலும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஆனது நடைபெற உள்ளதாகவும்

காஷ்மீர் விவகாரத்தை வேண்டுமென்றே அரசியல் காரணங்களுக்காக திமுக போன்ற கட்சிகள் இதை அரசியலாக்கி கொண்டிருக்கிறார்கள் இதை எதிர்ப்பதில் தாங்கள் தீவிரமாக உள்ளதாகவும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என தகவல் வந்துள்ளது பாராட்டுக்குரியதாகும் உள்ளதாகவும் திமுக தலைவர் எல்லாவற்றையும் அரசியலாக்க கூடாது என்றும் கூறினார்

மேலும் சிதம்பரம் தன் பதவியினை தவறாக பயன்படுத்தியதால் தான் அவர் கைது செய்யப்பட்டார் அதேபோல் கார்த்திக் சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் பியூஸ் மனுஷ் பாஜக அலுவலகத்தில் மற்றவர்களெல்லாம் சத்யாகிரகம் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் பாஜக தொண்டர்கள் தானாக முன்வந்து வன்முறையில் ஈடுபடவில்லை வேண்டும் என்று வரம்பு மீறி அலுவலகத்தில் புகுந்ததால் தான் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறினார்

மேலும் அவர் கூறுகையில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது உள்ளதாகவும் சாதி கலவரத்தை கட்டுப்படுத்துவது காவல்துறையினர் கடமை என்றும் திமுக தலைவர் பதவி ஏற்று ஓராண்டை கொண்டாடுவது கிடைக்காமல் கிடைத்த பதவியை கொண்டாட வேண்டியதுதான் ரொம்ப வருஷ மாக அவர் எதிர்பார்த்தார் கலைஞர் இருக்கும்போது கிடைக்கும் எனவும் எதிர்பார்த்தார் கலைஞர் இறந்த பிறகுதான் கிடைத்தது இருந்தும் என்ன சாதனை செய்துவிட்டார் வெளிநடப்பு செய்தது ஒரு சாதனையா என்றும் அவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்

நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றி ஸ்டாலினுக்காக வெற்றி என்பதை தான் ஒப்புக் கொள்ளவில்லை எனவும் மக்களும் இதை ஒப்புக் கொள்ளவில்லை எனவும் கூறினார்

தங்க தமிழ்ச்செல்வன் பற்றிய கேள்விக்கு அம்மாவின் புகழ் பாடிய வாய் இன்று தளபதியின் புகழ்பாட இருக்கிறது நாளைக்கு என்ன யாருடைய புகழை ஆடப் போகிறார் என தெரியவில்லையே என்று நகைச்சுவையாக கூறினார் தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.