ETV Bharat / city

அவதூறுப் பேச்சால் பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சுவாமி அதிரடி கைது - Cases against Kishor K. Swamy

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சுவாமி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவதூறுப் பேச்சால் கிஷோக் கே.சுவாமி அதிரடி கைது

author img

By

Published : Jun 14, 2021, 9:16 AM IST

Updated : Jun 14, 2021, 9:34 AM IST

சென்னை: கே.கே நகரைச் சேர்ந்தவர் பாஜக ஆதரவாளரும், யூ-ட்யூபருமான கிஷோர் கே.சுவாமி. இவர் சமூக வலைதளங்களில் திமுக, அதன் ஆதரவு கட்சிகளை தொடர்ந்து தரக்குறைவாக விமர்சித்து வந்தார்.

சமீபத்தில் இவர் தனது வலைதளப்பக்கத்தில் முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை இழிவுப்படுத்தும் விதமாக கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் ஜூன் 10ஆம் தேதி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் கிஷோர் கே.சுவாமியை காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

இவர் மீது கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல்,பொது அமைதிக்கு எதிராக கருத்தை பரப்புதல்,சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

பின்னர் கிஷோர் கே.சுவாமியை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கிஷோர் கே. சுவாமியை சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: இன்று கூடுகிறது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: சசிகலாவின் அரசியல் தலையீடுகளுக்கு முடிவு?

Last Updated : Jun 14, 2021, 9:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.