ETV Bharat / city

'பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் வெறும் பேச்சினால் சொல்லிக்கொண்டிருந்ததை பிரதமர் செய்துகாட்டியிருக்கிறார்' - vp duraisamy

குடியரசுத்தலைவர் பதவிக்கு, முதன்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த மலையகப் பெண்மணியான திரௌபதி முர்முவுக்கு வாக்களித்து திமுக கட்சியின் சமூக நீதி என்பது நிஜமா போலியா என்பதை நிரூபித்துக் காட்டுங்கள், என பாஜக மாநிலத்துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் வெறும் பேச்சினால் சொல்லிக் கொண்டிருந்ததை பிரதமர் செய்துகாட்டியிருக்கிறார் -விபி துரைசாமி

author img

By

Published : Jun 24, 2022, 4:14 PM IST

சென்னை: இந்தியாவின் உயர் அதிகாரம்மிக்க குடியரசுத் தலைவர் பதவிக்கு, முதன்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த மலையகப் பெண்மணியான திரௌபதி முர்முவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அரசால் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் பாஜக மாநிலத்துணைத் தலைவர் வி.பி.துரைசாமி இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், 'சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இரண்டாவது முறையாக ஒரு பெண்மணிக்கும் முதல்முறையாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த வாய்ப்பு மறுக்கப்பட்ட மலையகத்தைச் சேர்ந்தவருக்கும் குடியரசுத் தலைவராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திராவிட மாடல், திராவிட மாடல் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பட்டியல் இனத்தவருக்கும், குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் என்று தன்னை தானே வியந்து சொல்லிக் கொள்வது வழக்கம்.

தமிழ்நாடு முதலமைச்சரே, உங்களின் சமூக நீதிக் கொள்கையை நிரூபிக்க உங்களுக்கு அருமையான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பட்டியல் இனத்திற்காகப் பாடுபடுவோம் என்று வாயால் மட்டும் வடை சுட்டுக் கொண்டிருக்காமல், பட்டியல் இனத்தின் மலை சாதியினப் பெண்மணிக்கு வாக்களித்து உங்களின் சமூகநீதியை நிலைநாட்டி காட்டவேண்டும்.

தாங்கள் பெரியாரின் நினைவிடத்திற்கு வேண்டுமானால் ஒரு முறை சென்று வாருங்கள். அண்ணாவின் நினைவிடத்திலும் அரைமணி நேரம் சென்று வாருங்கள். ஏன் கலைஞரின் நினைவிடத்திலும் சென்று கேட்டுப்பாருங்கள். சமூக நீதி குறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு வாருங்கள்.

சமூகநீதி காப்பாளர் என்ற பட்டங்கள் மட்டும் சூட்டிக்கொண்டால் மட்டும்போதாது: பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் வெறும் பேச்சினால் சொல்லிக் கொண்டிருந்ததை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அவர்களுக்கு உயர் பதவி வழங்கி உண்மையான சமூக நீதியை நிலைநாட்டி நிரூபித்திருக்கிறார். அண்ணல் வாஜ்பாய் அவர்கள் காலத்தில் சிறுபான்மை இனத்தவரான அப்துல் கலாம் அவர்களுக்கு குடியரசுத்தலைவராக பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தியாவிலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பட்டியலின மக்களுக்காகவும் அதிகமாக குரல் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று உரத்த குரலில் உச்சரித்தால் மட்டும் போதுமா? நடைமுறையில் அதை நீங்கள் செய்து காட்ட வேண்டாமா? சமூகநீதி காப்பாளர் என்ற பட்டங்கள் மட்டும் சூட்டிக்கொண்டால் மட்டும்போதாது.

அதை செயலில் நிரூபித்துக் காட்ட வேண்டும். உங்களுக்கு அருமையான வாய்ப்பினை பாரதிய ஜனதா கட்சி வழங்கியிருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கப் போவது, ஒடுக்கப்பட்ட பழங்குடியின பெண்மணிக்கா? அல்லது உயர்சாதி இனத்தவருக்கா? என்பதை நீங்களும் உங்கள் கூட்டணி கட்சியினரும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் கட்சியின் சமூக நீதி என்பது நிஜமா போலியா என்பதை நிரூபித்துக்காட்டுங்கள். மக்களும் தெரிந்து கொள்ளட்டும் நீங்கள் காப்பது சமூக நீதியா? அல்லது நீங்கள் வெறும் சந்தர்ப்பவாதியா' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குடியரசு தலைவர் தேர்தல் - வேட்பு மனுதாக்கல் செய்தார் திரெளபதி முர்மு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.