சென்னை: தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக உடனான பேச்சுவார்த்தை நல்லமுறையில் உள்ளது. நாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். சசிகலா தினகரன் - பலம், பலவீனம் அதிமுக-விற்குத் தான் தெரியும். அமமுக இணைவது குறித்து அதிமுகவே முடிவெடுக்கும்.
நாங்கள் எத்தனை தொகுதிகள் பெறுகிறோமோ, அத்தனையிலும் வெற்றி பெறுவோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. விரைவில் முறையான அறிவிப்பு வரும்” எனத் தெரிவித்தார்.