சென்னை: பாஜக தலைமை இடமான கமலாலயத்தில் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று (ஜூன் 25) காலை 10 மணிக்கு கூடியது.
மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, நடிகை நமீதா, குஷ்பூ, நடன பயிற்றுநர்களான கலா, காயத்ரி ரகுராம், மதுவந்தி உள்ளிட்டப் பல முக்கிய செயற்குழு உறுப்பினர்கள் நேரடியாக கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
சென்னை தவிர பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் காணொலிக் காட்சி வாயிலாகச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பாஜக செயற்குழு கூட்டத்தில் 6 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- கரோனா நோய்த்தொற்றை திறம்பட கையாண்ட ஒன்றிய அரசுக்கு பாராட்டு
- சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் பணி சிறக்கவும், அதேபோல அதற்காக பணியாற்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பு
- 'ஒன்றிய அரசு' என்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
- மாணவர்களுக்கு அதிகப் பயன் அளிக்கக்கூடிய நீட் தேர்வில் மக்களை ஏமாற்றும் திராவிடக் கட்சிகளை பாஜக கண்டித்து தீர்மானம்
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மாநில அரசுக்குக் கண்டனம்
- கோயில் நில ஆக்கிரமிப்பிற்கும் மற்றும் இந்து பள்ளிகளை அவமானப்படுத்துவதற்கும் கண்டனம்