சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சண்முகப்பிரியா என்ற இளம்பெண் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு அந்த தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் எதிர் திசையில் இருந்து வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள், அவர் கையில் வைத்திருந்த பர்ஸ்யைப் பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட யுவராஜ், ராஜசேகர் ஆகிய இருவரையும் தண்டையார்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.