ETV Bharat / city

'கற்போம் எழுதுவோம் இயக்கம்' மூலம் 3,21,539 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு - Basic literacy for 3,21,539 people

தமிழ்நாட்டில் 'கற்போம் எழுதுவோம் இயக்கத்தின்' மூலம் 3,21,539 பேர் பயனடைந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

'கற்போம் எழுதுவோம் இயக்கம்' மூலம் 3,21,539 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு

author img

By

Published : Aug 1, 2021, 4:57 PM IST

சென்னை: 'கற்போம் எழுதுவோம் இயக்கத்தின்' மூலம் பலர் அடிப்படைக்கல்வி அறிவு பெற்றுள்ளனர்.

இதுகுறித்து வயது வந்தோர் மற்றும் முறைசாரா கல்வித்திட்ட இயக்குநர் ராமேஸ்வர முருகன் கூறியதாவது, 'தமிழ்நாட்டில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத 3,10,000 கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் வகையில், 'கற்போம் எழுதுவோம் இயக்கம்' என்கிற வயதுவந்தோர் கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

120 மணி நேர கற்றல் செயல்பாடு
இத்திட்டத்தின்கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களில் 15,581 கற்போர் எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் தன்னார்வ ஆசிரியர்களின் உதவியுடன் கற்போர்களுக்கு 120 மணி நேர கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் கல்வித்தொலைக்காட்சி மூலமாகவும் கற்போர்களுக்கான கல்விச் செயல்பாடுகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இறுதி முகாமில் தமிழ்நாடு முழுவதும் 3,21,539 பேர் பங்கேற்பு
இதன்தொடர்ச்சியாக, இத்திட்டக் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவு இறுதி மதிப்பீட்டு முகாம் ஜூலை 29 முதல் 31ஆம் தேதி வரை மூன்று நாள்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த இறுதி மதிப்பீட்டு முகாமில் 3,21,539 கற்போர் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவிலேயே, 'கற்போம் எழுதுவோம்' இயக்கம் திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்திய மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இத்திட்டத்தின் மொத்த இலக்கான 3,10,000 கற்போர் என்பதை விஞ்சி, 3,21,539 கற்போர் இத்திட்டத்தில் பங்கேற்றுப் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும், கற்போராக மகளிர், பட்டியலின மற்றும் பழங்குடியினக் கற்போர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், வயதில் மிகவும் முதிய கற்போர் ஆகியோருக்கு இத்திட்டத்தின்கீழ் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இக்கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் விரைவில் வழங்கப்படும்' எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு எப்போது?: மா.சு பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.