ETV Bharat / city

வங்கி ஊழியர்களின் போராட்டம்; மத்திய அரசு செவி சாய்க்குமா?

சென்னை: 10 பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் தன்னிச்சையான முடிவினை கண்டித்து வங்கி ஊழியர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

வங்கி ஊழியர்களின் போராட்டம்; மத்திய அரசு செவி சாய்க்குமா?
author img

By

Published : Sep 1, 2019, 12:15 PM IST

10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதற்கு வங்கி ஊழியர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன,

வங்கி ஊழியர்களின் தொடர் போராட்டம்

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் தன்னிச்சையான முடிவினை கண்டித்தும், பொதுத்துறை வங்கிகளை இணைத்தால் பொருளாதார வளர்ச்சியில் நாடு உயரும் என்ற தவறான கொள்கை போக்கினை கண்டித்தும் நாடு முழுவதும் உள்ள சுமார் 9 லட்சம் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வங்கிகள் முன்பு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் மத்திய அரசின் இந்தக் கொள்கை முடிவையும் எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் செய்தியாளர்களுடன் பேசுகையில், "நமக்கு பெரிய வங்கிகள் தேவையில்லை; பலமான வங்கிகள் இருந்தாலே போதும்; வாரா கடனை சரி செய்தாலே நாட்டில் பொருளாதாரம் மேம்படும்" என்று தெரிவித்தனர்.

Intro:நெல்லையில் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் தன்னிச்சையான முடிவினை கண்டித்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Body:

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் தன்னிச்சையான முடிவினை கண்டித்தும், பொதுத்துறை வங்கிகளை இணைத்தால் பொருளாதார வளர்ச்சியில் நாடு உயரும் என்ற தவறான கொள்கை போக்கினை கண்டித்தும் நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் முருகன்குறிச்சியில் உள்ள வங்கிகள் முன்பு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்ப்பட்ட பெண் ஊழியர்களும் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அரசின் இந்த கொள்கை முடிவையும் எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.