சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்த லட்சுமிபுரம், சி.டி.ஓ. காலனி 5ஆவது தெருவில் வசித்துவருபவர் கிளாடி (48). தனியார் வங்கியில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார்.
இவர் நேற்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள மளிகைக் கடைக்குச் சென்று பொருள்களை வாங்கிவிட்டு வீட்டிற்குத் திரும்பும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஒருவர் அவரைப் பின்தொடர்ந்துவந்து, அவரது 2 சவரன் தங்க தாலிச் சங்கிலியைப் பறித்து தப்பிச் சென்றுவிட்டார்.
இது குறித்து கிளாடி தாம்பரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் காவல் துறையினர் விரைந்துவந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம், தாலிச் சங்கிலியைப் பறித்து தப்பிச் சென்றவர்களைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்: தடயவியல், அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்கள் சோதனை