ETV Bharat / city

சென்னையில் திருமண ஆசைக்காட்டி பணம் பறித்த நபரின் ஜாமீன் மனு தள்ளுபடி - திருமண ஆசைக்காட்டி பணம் பறித்தவர்

திருமணம் ஆசைக்காட்டி பெண் மருத்துவர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, ரூ.50 லட்சத்திற்கு மேல் மோசடி செய்த இளம் மருத்துவரின் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 29, 2022, 10:55 PM IST

சென்னையை அடுத்த நாவலூரைச் சேர்ந்த 28 வயதான மருத்துவர் கார்த்திக் ராஜ் என்பவருடன் அடையாறு பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் பழகி வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தை கூறிய கார்த்திக், ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் பணத்தையும், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோனையும் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, திருமண பேச்சு வந்தபோது நேரில் சந்திப்பதைத் தவிர்த்தால் சந்தேகமடைந்த பெண் மருத்துவர் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆக.14ஆம் தேதி கார்த்திக் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் ஜாமீன் கோரி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு, பொறுப்பு முதன்மை நீதிபதி வி.தங்கமாரியப்பன் முன் இன்று (செப்.29) விசாரணைக்கு வந்தபோது, மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, புகார் தாரரான பெண் மருத்துவர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய அவர், அவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் ரூபாய்க்கு மேல் மருத்துவர் மோசடி செய்துள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். அதை ஏற்ற நீதிபதி, மருத்துவர் தினேஷ் கார்த்திக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 35 வயது ஆண்களே உஷார்... திருமண கமிஷன் மோசடி... வாய்ஸ் மெசேஜால் வெளிவந்த உண்மை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.