ETV Bharat / city

நெல்லை கண்ணன் மீது பகுஜன் சமாஜ் கட்சி புகார்! - பகுஜன் சமாஜ் கட்சி

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

samaj
samaj
author img

By

Published : Jan 2, 2020, 4:39 PM IST

இதுதொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சத்தியமூர்த்தி, “குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து கடந்த 29ஆம் தேதி நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை, பதவி வெறி கொண்டவராக சித்தரித்தும், மிகவும் அவதூறாகவும் பேசியுள்ளார்.

இப்பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமன்றி, பொதுமக்களின் மனதில் சாதி உணர்வைத் தூண்டக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. மேலும், மாயாவதி மீது மரியாதை வைத்திருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களின் மனதை பாதிக்கும் வகையில் அப்பேச்சு அமைந்திருக்கிறது. எனவே, நெல்லை கண்ணனை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய செய்யவேண்டும் “ என்றார்.

’நெல்லை கண்ணனை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’

இதையும் படிங்க: நெல்லை கண்ணன் பெரம்பலூரில் கைது

Intro:Body:பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை பற்றி அவதூறாக பேசிய நெல்லை கண்ணனை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி பகுஜன் கட்சி சார்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் சத்திய மூர்த்தி

குடியுரிமை மசோதாவை கண்டித்து கடந்த29 ஆம் தேதி நெல்லையில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் நெல்லை கண்ணன் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை பதவி வெறி கொண்டவராக சித்தரித்து மிகவும் அவதூறாக பேசினார்.

இந்த பேச்சு கண்டிக்கும் வகையில் இருந்ததாகவும், பொதுமக்களின் மனதில் ஜாதியை தூண்டக்கூடிய வகையில் அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் இதனால் மாயாவதி மீது மரியாதை வைத்திருந்த லட்சக்கணக்கான பொதுமக்களின் மனதை பாதிக்கும் வகையில் பேச்சு அமைந்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

அவரது சாதிவெறி பேச்சு சமூக சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும்,மேலும் அவர் தெரிவித்த கருத்துக்கு நெல்லை கண்ணனை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்யவேண்டும் என அவர் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.