ETV Bharat / city

கர்ப்பத்தை மறைத்த மாணவி - தற்கொலைக்கு முயன்றபோது பிறந்த ஆண் குழந்தை - மாடியில் இருந்து குதித்த பெண்ணிற்கு இறந்து பிறந்த குழந்தை

சென்னையில் தனது கர்ப்பத்தை மறைத்த கல்லூரி மாணவி, மாடியிலிருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்றபோது அவருக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தற்கொலைக்கு முயன்றபோது பிறந்த ஆண் குழந்தை

author img

By

Published : Dec 14, 2021, 10:43 PM IST

சென்னை: கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான இளம்பெண். இவர், இன்பர்மேஷன் டெக்னாலஜி 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று (டிச.13) காலை தனது தந்தையிடம் வயிறு வலிப்பதாகக் கூறியுள்ளார். உடனே அவரது தந்தை வெந்தயம் கலந்த தண்ணீரை குடிக்கச் சொல்லி கொடுத்துள்ளார். தண்ணீரை குடித்த பின்னர் மாணவி மாடியில் நடைபயிற்சிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர், திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதில் அவருக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. மேலும், அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவருக்கு ஆண் குழந்தை பிறந்து இருந்ததையும் கண்டு பேரதிர்ச்சியடைந்தனர்.

சிகிச்சை

உடனே மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாணவி, தன்னுடன் பயின்றுவந்த செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததும், பின்னர் இருவரும் நெருங்கிப் பழகியதில் அவர் கர்ப்பமடைந்ததும் தெரியவந்தது. தான் கர்ப்பமடைந்ததை தனது பெற்றோரிடம் சொல்லாமல் அவர் மறைத்துள்ளார். பெற்றோரும் தன் மகள் கர்ப்பமாக இருப்பது தெரியாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் எட்டு மாத கர்ப்பிணியான மாணவி திருமணம் ஆகாமலேயே குழந்தை உண்டானது பெற்றோருக்குத் தெரிந்தால் அவமானம் என நினைத்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு குதித்ததில் குழந்தை இறந்த நிலையில் பிறந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

தற்கொலை எதற்கும் தீர்வல்ல - மன அழுத்தம், கவலை, குழப்பம் ஏற்படும்போது தற்கொலை எண்ணாம் தோன்றினால் உடனடியாக மாநில தற்கொலை தடுப்பு உதவிக்கு 104 என்ற எண்ணிற்கு அழையுங்கள். மேலும், சிநேகா உதவி எண்களான 044 - 24640050 என்ற எண்ணிற்கும் அழைக்கவும்.

இதையும் படிங்க: இளைஞரின் மரணத்தை மறைத்த நால்வர் கைது!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.