ETV Bharat / city

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை அறிவிப்பு! - ayanavaram rape case verdict

அயனாவரம் சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கில் நால்வருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும் ஒருவருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனையும் மீதமுள்ள 9 நபர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ayanavaram Child Abuse Case, ayanavaram rape case verdict, அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் தண்டனை அறிவிப்பு
ayanavaram rape case verdict
author img

By

Published : Feb 3, 2020, 3:26 PM IST

சென்னை: அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் 15 குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்து உறுதிசெய்துள்ளது.

சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை அதே குடியிருப்பில் உள்ள ரவிக்குமார், சுரேஷ், ராஜசேகர், எரால் பிராஸ், அபிஷேக், குமரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், பழனி, தீனதயாளன், பாபு, ராஜா, சூர்யா, குணசேகரன், ஜெயராமன், உமாபதி உள்ளிட்ட 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களைக் குண்டர் தடுப்புக் காவல் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார். 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை 2019ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி உயர் நீதிமன்றம் ரத்துசெய்த பின்னரும், 17 பேருக்கும் பிணை கிடைக்கவில்லை. இந்நிலையில் 17 பேருக்கு எதிரான வழக்கின் விசாரணையை 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மகிளா நீதிமன்றம் தொடங்கியது.

இந்த வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞராக என். ரமேஷ் நியமிக்கப்பட்டார். அதேபோல, குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கும் தனித்தனியாக வழக்குரைஞர்கள் முன்னிலையாகினர். இந்த வழக்கு விசாரணையின்போது, 7 குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளும், 36 அரசு தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த வழக்கு விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசுத் தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். மேலும் 120 வழக்கு ஆவணங்களும் காவல் துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டன. குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 354 B, 366 (பாலியல் வன்கொடுமை), 376 AB (காயமேற்படுத்துதல்), 376BD (கூட்டு பாலியல் வன்கொடுமை), 307 (கொலை முயற்சி), 506 (2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழும், போக்சோ சட்டத்தின் 10 மற்றும் 12ஆவது பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

மேலும், 12 வயதுக்குக் குறைவான சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரணதண்டனை விதிக்கும் வகையில் 2018ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குற்றவியல் திருத்தச் சட்டத்தின் புதிதாக நிறைவேற்றப்பட்ட பிரிவுகளின் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டது.

11 மாதங்களாக நடைபெற்றுவந்த வழக்கு விசாரணை கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தை அடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையின் சிறையில் உயிரிழந்த பாபு தவிர மற்ற 16 பேரும் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேரில் தோட்டக்காரர் குணசேகரனைத் தவிர்த்து மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு வழங்கினர்.

குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் சிறையில் உயிரிழந்ததையடுத்து 16 பேருக்கு எதிரான வழக்கில் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் குறித்து பிப்ரவரி 3ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இவ்வழக்கின் தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. இவ்வழக்கில் ரவிக்குமார், சுரேஷ், ராஜா, குமரன் ஆகிய நால்வருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும் ஒருவருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனையும் மீதமுள்ள 9 நபர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Intro:Body:

சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் 15 குற்றவாளிகளும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர் | #ChildAbuseCase | #Chennai

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.