தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 24 மணி நேரமும் லாரியை இயக்கும் போது அதிகளவு விபத்து ஏற்படாமல் தடுக்க தண்ணீர் லாரி உரிமையாளர்களுக்கு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையர் சுதாகர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் இணை ஆணையர் சுதாகர் பேசும்போது, கோடைக்காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இந்த ஒரு மாதம் மட்டும் 24 மணி நேரமும் தண்ணீர் லாரியை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஓய்வு இல்லாமல் லாரியை இயக்கும்போது அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஓட்டுனர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுரை கூறினார். மேலும், இதே போல் சென்னை முழுவதும் லாரி ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.