ETV Bharat / city

இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழப்பு - accident rate in chennai

ஆவடி அருகே இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

avadi accident cctv footage
அரசு பேருந்து மோதியதில் வாலிபர் உயிரிழப்பு
author img

By

Published : Jan 30, 2022, 7:25 PM IST

சென்னை: ஆவடி அருகே திருமுல்லைவாயல் கோயம்பேடு சாலை பாரதி நகர் மூன்றாவது தெருவில் வசித்தவர் அணில் (23). வடமாநிலத்தைச் சேர்ந்த இவர் கூலி வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் (ஜன.28) இரவு திருமுல்லைவாயில் குளக்கரை தெரு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அரசு பேருந்து ஒன்று அவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் அணில் படுகாயமடைந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அணில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

அரசு பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

இது பற்றி தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சண்முகத்தை (50) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் அமர் ஜவான் ஜோதிக்கு அடிக்கல் நாட்டும் ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.