ETV Bharat / city

ஆட்டோக்களை இயக்க அனுமதி வேண்டும் - ஓட்டுநர்கள் கோரிக்கை - ஆட்டோ ஓட்டுநர்கள்

சென்னை: வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ள நிலையில், ஆட்டோக்களை மீண்டும் இயக்க அனுமதி வழங்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

drivers
drivers
author img

By

Published : May 20, 2020, 7:19 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக தொடர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களுக்கு, ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளது. அதில், மாவட்டங்களுக்குள்ளான பேருந்து சேவை உள்ளிட்டவைகளுக்கு நிபந்தனைகளோடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆட்டோ, கால் டாக்ஸி ஆகியவை இயங்க தடை நீடிக்கிறது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அரசிடம் கோரியுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள மூன்று லட்சம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் கரோனா வைரஸ் நிவாரணத் தொகையாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க அரசை வேண்டியுள்ள அவர்கள், அவசரத் தேவைகளுக்காகவும், வாழ்வாதாரம் பாதிப்புக்காகவும் இயக்கப்பட்ட ஆட்டோக்களை அலுவலர்கள் பறிமுதல் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

வருவாய் பாதித்துள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓராண்டுக்கு தகுதிச் சான்றிதழ் (FC), சாலை வரி, காப்பீடு கட்டணம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை அரசு தங்களது கோரிக்கைகளை பரிசீலிக்காவிட்டால், சென்னையில் ஒரு லட்சம் ஆட்டோக்களை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கூறியுள்ளனர்.

ஆட்டோக்களை இயக்க அனுமதி வேண்டும் - ஓட்டுநர்கள் கோரிக்கை

இதையும் படிங்க: நாடகக் கலைஞர்களுக்கு உதவிய விமல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.