ETV Bharat / city

சென்னை மணலியில் ஆட்டோ ஓட்டுனர் கொலை: 4 பேர் கைது - மணலியில் கொடுர கொலை வாலிபர்

சென்னை மணலி புதுநகர் எம்ஆர்எப் குடியிருப்பு அருகே ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மணலியில் ஆட்டோ டிரைவர் கொடூர கொலை:கொலை செய்யப்பட்ட 4 பேர் கைது

author img

By

Published : Apr 29, 2022, 12:41 PM IST

சென்னை: மணலி புதுநகர் எம்ஆர்எப் குடியிருப்பு அருகே வாலிபர் ஒருவரின் உடல் தலை நசுக்கப்பட்டு பயங்கர காயங்களுடன் இருப்பதாக மணலிபுதுநகர் காவல் துறையினர் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர் வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சடலமாக மீட்கப்பட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் மணலி புதுநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரன்(32) என தெரியவந்தது. இது தொடர்பாக மணலி புதுநகரை சேர்ந்த மதன் என்கிற ஆறுவிரல் மதன்(27), குத்தா(24), பரத்(26), பப்லு(27) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிடிபட்ட ஆறுவிரல் மதன் ரவுடி என்பதும், அவருக்கும் கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரனுக்கும் 6 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது.

சென்னை மணலியில் ஆட்டோ டிரைவர் கொடூர கொலை:கொலை செய்யப்பட்ட 4 பேர் கைது
சென்னை மணலியில் ஆட்டோ டிரைவர் கொலை: 4 பேர் கைது

இதில் ஆத்திரத்தில் இருந்து வந்த மதன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரவிச்சந்திரனை மது அருந்த அழைத்து சென்றுள்ளார். மது அருந்திவிட்டு மது போதை தலைக்கு ஏறிய பின் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவிச்சந்திரனை குத்தியதும், தலையில் கல்லை போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.

மேலும் ரவிச்சந்திரனின் உடலை செல்பி எடுத்து மதன் சமூக வலைதளங்களில் பரப்பியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர்,்அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிடிபட்ட நான்கு பேர் மீதும் பல்வேறு அடிதடி கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும் அவர்கள் மது கஞ்சா போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்பதும் தெரியவந்தது.கொலை செய்யப்பட்ட ரவிச்சந்திரனுக்கு கீர்த்தனா என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

இதையும் படிங்க:கத்தியுடன் சுற்றித்திரிந்த இரண்டு ரவுடிகள் கைது...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.