சென்னை: தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் குணா(21). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். நேற்று(மார்ச்.09) காலை வழக்கம் போல் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோவை நிறுத்தி சவாரிக்கு நின்றுகொண்டிருந்தபோது போக்குவரத்து காவலர் ரமேஷ் ஆட்டோ சாவியை எடுத்துச் சென்றுள்ளார்.
இதனால் ஆட்டோ ஓட்டுநர் குணா அவரது தந்தை சுரேஷ்க்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு வரவழைத்தார். சுரேஷ் அங்கு வந்து காவலரிடம் ஏன் சாவியை எடுத்தீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு காவலர் அவரை தகாத வார்த்தையில் பேசி சுரேஷை கீழே தள்ளி விட்டதால், அவரின் மகன் குணா தடுக்க சென்ற போது போக்குவரத்து காவலர் ரமேஷ் அவரின் மூக்கில் குத்தியதால் அவரின் மூக்கு உடைத்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து குரேம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில், பலமாக காவலர் தாக்கியதால் மூக்கு தண்டு உடைந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பீர்க்கன்காரனை காவல்நிலையத்தில் போக்குவரத்து காவலர் ரமேஷ் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போக்குவரத்து காவலரிடம், காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வெற்றி எங்களுக்கு ஜிலேபி உங்களுக்கு... பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆர்ப்பரிப்பு...