சென்னை விமான நிலையத்தில் மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகள் சுங்கத் துறையினரின் சோதனைக்குப் பின் வெளியே வந்த அவர்களை நிறுத்தி மத்திய வருவாய்ப் புலனாய்வு துறை (டி.ஆா்.ஐ.) மீண்டும் சோதனை செய்தது.
அப்போது 13 பயணிகளிடமிருந்து கோடிக்கணக்கில் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணு பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டு அவர்களிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்டன.
அதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் அனைவருமே கடத்தல் குருவிகள் என்றும், இவா்கள் வழக்கமாகப் பல்வேறு நாடுகளிலிருந்து தங்கம் உள்ளிட்ட பொருள்களைக் கடத்திவருபவர்கள் என்றும் தெரியவந்தது.
தொடா்ந்து கடத்தல் குருவிகளிடம் விசாரணை மேற்கொண்டபோது சுங்கத் துறையில் உள்ள சிலரின் ஒத்துழைப்போடுதான் இந்தக் கடத்தல் பொருள்கள் வெளியே சென்று உள்ளதும் தெரியவந்திருக்கிறது.
இதனால் டி.ஆர்.ஐ. அலுவலர்கள், சுங்கத் துறை அலுவலர்களிடமும் தீவிரமாக விசாரணை நடத்தியதில், சுங்கத் துறை அலுவலர்கள் இருவர் கடத்தல் ஆசாமிகளுக்குத் துணைபோனது உறுதியாகியுள்ளதால் அவா்கள் இன்று இரவுக்குள் கைதுசெய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக உயர் அலுவலர்களிடம் கேட்டபோது அவா்கள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
இதையும் படிங்க: அமலாக்கத் துறையின் அதிரடி ரெய்டு! - சிக்கிய கிலோ கணக்கிலான தங்க நகைகள்