ETV Bharat / city

லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் கைது - எடை தராசு விற்பனையாளர்

சென்னை: எடை தராசு விற்பனையாளரிடம் உரிமம் புதுப்பிக்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர், அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர்.

லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் கைது

author img

By

Published : Aug 4, 2020, 6:17 PM IST

சென்னை, முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் வரதன் (37). இவர் எலக்ட்ரானிக் எடை தராசை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவர் விற்பனை செய்யும் தொழிலுக்கான உரிமம் சமீபத்தில் காலாவதியாகி விட்டது. இதனையடுத்து, கடந்த மாதம் வரதன் உரிமத்தை புதுப்பிப்பதற்காக திருவள்ளூர் தொழிலாளர் துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த உதவி ஆணையர் வளர்மதியிடம் உரிமம் புதுப்பிப்பது தொடர்பாக அணுகியுள்ளார்.

அப்போது அவர், தனது உதவியாளர் ஜான் பிரகாஷ், கேட்கும் பணத்தை கொடுத்து உரிமம் பெற்று கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால், லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத வரதன் சென்னை லஞ்ச ஒழிப்பு காவல்துறை டி.எஸ்.பி லவக்குமாரை சந்தித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வரதனிடம் அவர் கேட்கும் பணத்தை கொடுக்குமாறு கூறி அனுப்பியுள்ளனர். பின்னர், காவல்துறையினர் அவர்களை பிடிக்க பின் தொடர்ந்த போது லஞ்ச பணத்தை வாங்காமல், அவர்கள் தப்பி சென்று விட்டனர் என கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த 30ஆம் தேதி மீண்டும் வரதன் ஜான் பிரகாஷை சந்தித்து உரிமம் தொடர்பாக பேசியுள்ளார். அப்போது, அவர் அம்பத்தூரில் உள்ள தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் ரவிக்குமாரை சந்தித்து பணம் கொடுத்து உரிமம் பெற்று கொள்ளும்படி கூறி உள்ளார். இதனையடுத்து அவர், ரவிக்குமார் (59) என்பவரை சந்தித்து உரிமம் தொடர்பாக பேசியுள்ளார். அப்போது, அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் உரிமத்தை புதுப்பித்து தருவதாக கூறி உள்ளார்.

இது குறித்து, வரதன் மீண்டும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை டி.எஸ்.பி லவக்குமாரிடம் சென்று தகவல் கூறியுள்ளார். பின்னர், காவல்துறையினர் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை ரசாயனம் தடவி வரதனிடம் கொடுத்து ரவிக்குமாரிடம் வழங்குமாறு கூறியுள்ளனர். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 3) மாலை வரதன் அம்பத்தூரில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளர் ரவிக்குமாரிடம் லஞ்ச பணம் கொடுக்க சென்றுள்ளார்.

அப்போது அவர், எடை தராசை சர்வீஸ் செய்யும் தனது உதவியாளர் சுந்தரவேல் (57) என்பவரிடம் பணம் வழங்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து, வரதன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை சுந்தரவேலுவிடம் வழங்கியுள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சுந்தரவேலுவையும், லஞ்சம் வாங்க கூறிய உதவி ஆய்வாளர் ரவிக்குமாரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை டி.எஸ்.பி லவக்குமார் தலைமையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.