சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி,” நடிகர் ரஜினிகாந்த் மிக உயர்ந்த மனிதர் என்பது அவரின் அறிக்கை மூலம் தெரிகிறது. உடல் நலம் கருதி நல்ல முடிவை அவர் வெளியிட்டுள்ளார். அதேபோல், அரசியலில் கமலும் தொடர மாட்டார். கடலில் பெய்த மழை போல கமலின் உழைப்பும் வீண் போய்விடும் என்பது அவருக்கே தெரியும். அதை உணர்ந்து அவரும் ரஜினிகாந்த் எடுத்த முடிவைப் போலவே எடுப்பார் என நம்புகிறேன்.
சசிகலாவால் எந்த ஒரு தொந்தரவும் அதிமுகவுக்கோ, ஆட்சிக்கோ வராது. ஜனவரி முதல் வாரம் அவர் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியே வந்தபின் அவரின் முடிவை அவரே எடுப்பார்.
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் எந்த குழப்பமும் இல்லை. இதற்குப்பிறகு அதை யாரும் அறிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அரசின் அம்மா மினி கிளினிக் திட்டமும், பொங்கல் பரிசு ரூ.2,500ம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது திமுகவுக்கு பாதகமாகியுள்ளதால், அதனை திசைத் திருப்பவே ஆளுநரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர் “ என்றார்.
இதையும் படிங்க: ரஜினியை வைத்து அரசியல் லாபம் அடைய நினைத்த பாஜகவுக்கு தோல்வி - இயக்குநர் வ.கெளதமன்