விசா மோசடி வழக்குத் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் சோதனை மேற்கொண்டது குறித்து அவரது தந்தையும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேள்விஎழுப்பினர்.
அதற்கு அவர் புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை பற்றி எல்லாம் புதிதாக கருத்து சொல்ல ஒன்றுமில்லை எனவும், இரண்டு நாட்களுக்கு முன்பு ஷாருக்கான் மகனுடைய வழக்கு எந்த விதத்தில் முடிந்தது என்பது அனைவருக்கும் தெரியும்; அதேபோல தான் என் மகன் வழக்கும் என்று கூறினார்.
மேலும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் பாஜகவுக்கு எதிராக குற்றம்சாட்டி இருப்பதைக் குறிப்பிட்டு பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் சவுத்ரி சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்தார். ’இவற்றையெல்லாம் வைத்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சாதாரண மக்கள் எல்லாம் முடிவு செய்துவிட்டனர். நீங்களும் ஒரு முடிவுக்கு வாருங்கள்’ என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பிரதமர் வருகை: முதலமைச்சர் பேசியதில் எந்த தவறுமில்லை - ப.சிதம்பரம் கருத்து