ஆசிரியர் தினமான நேற்று (செப்.05) சென்னையில் நடைபெற்ற புதுமைப் பெண் கல்வி திட்டம் தொடக்க விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி புறப்பட்டார்.
அப்போது அவரை தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி தமிழ்நாடு தலைவர் வசிகரன் கூறுகையில், “தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட கல்வி திட்டங்களுக்கு அரசியலுக்கு அப்பால் அரவிந்த் கெஜ்ரிவாலை அழைத்தது அவரது கல்விப் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார்.
இதனால் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை வந்த அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்க 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விமான நிலையம் வந்திருந்தனர். அவர்களை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க முடியவில்லை அதனால் மாநில குழு நிர்வாகிகளை சந்தித்து உற்சாகப்படுத்தினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது அரசியல் நோக்கம் அல்ல அடுத்தடுத்து இது அரசியல் மாற்றமாக மாறப்போவது காலப்போக்கில் தெரியும். நிச்சயமாக அரசியலில் மாற்றம் ஏற்படும் டெல்லி பஞ்சாப் ஆகிய பகுதிகளில் ஆம் ஆத்மி மிகப்பெரிய வெற்றி பெற்றது போல் குஜராத் தேர்தலிலும் வெற்றி பெறும். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்கி காட்டுவார்” இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க: 'சி.வி.சண்முகத்தை லுங்கியுடன் அழைத்துச்செல்லும் சூழல் வரும்..!' - புகழேந்தி