ETV Bharat / city

பருப்பு, பாமாயில் கொள்முதலில் 1,480 கோடி ஊழல் - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு - அறப்போர் இயக்கம்

சென்னை: பருப்பு, பாமாயில், சர்க்கரை கொள்முதல் செய்ததில் 1,480 கோடி ஊழல் நடந்துள்ளது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார் என அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

iyakkam
iyakkam
author img

By

Published : Jan 24, 2020, 4:20 PM IST

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசனில், 1,480 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது தொடர்பாக, அறப்போர் இயக்கத்தினர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராம், ” கடந்த நான்கு ஆண்டுகளில் கிறிஸ்டி ஃபிரைட் கிராம் நிறுவனத்தின் மூலம் சக்கரை, பாமாயில் மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதை ஆதாரங்களுடன் சி.பி.ஐக்கு கொடுத்துள்ளோம். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இந்த ஊழலில் பங்குள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே கொள்முதல் செய்யும்படியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு,. 2018 இல் நடைபெற்ற டெண்டரில் 10 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், 2019 ஆம்ஆண்டு டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் மட்டுமே பங்கேற்கும்படியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் மட்டுமே பங்கேற்கும்படியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

கிலோ 38 ரூபாய் விலையான சர்க்கரையை, ஜூலை 2019 டெண்டரில் 48 ரூபாய் என கொள்முதல் செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாமாயில் வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது. அதிகம் பேர் போட்டியிடாதபடியான டெண்டர்களை உருவாக்கி பாமாயிலை கிறிஸ்டி நிறுவனத்திடம் வாங்கியுள்ளனர். உடைத்த பருப்புகள்தான் சப்ளை செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறையை கடைபிடிக்காமல், உடைக்காமலேயே கிறிஸ்டி நிறுவனம் வழங்கியுள்ளது. பருப்பில் மட்டுமே 111 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளனர்.

இந்த ஊழல்கள் அனைத்திற்கும் பொறுப்பான அமைச்சர் காமராஜை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ் மீதும் முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஊழலில் பங்குள்ளதால், இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்

அமைச்சர் காமராஜை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்

இதையும் படிங்க: வேலம்மாளில் சோதனை - மூன்று நாட்களில் 400 கோடியா?

Intro:Body:tn_che_03_mega_scam_1480_crors_leaked_by_arappor_iyakkam_script_7204894
ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 24.01.20

ரேசன் கடைகளுக்காக பருப்பு, பாமாயில், சர்க்கரை கொள்முதல் செய்ததில் 1480 கோடி ஊழல் நடந்துள்ளது; என்ன சொல்லப்போகிறார் முதல்வர்..!! அறப்போர் ஜெயராம் பேட்டி...

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்பரேசனில் 1480 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக அறப்போர் இயக்கத்தினர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராம், சக்கரை, பாமாயில் மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் தான் கடந்த நான்கு ஆண்டுகளில் கிருஷ்டி பிரைட் கிராம் நிறுவனத்தின் மூலம் இந்த ஊழல் நடைபெற்றுள்ளதை ஆதாரங்களுடன் சி.பி.ஐ க்கு கொடுத்துள்ளோம்.
தரமற்ற பொருட்கள் வழங்கியுள்ளனர். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் இந்த ஊழலில் பங்கேற்றுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே கொள்முதல் செய்யமுடியும் படியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2018 ல் நடைபெற்ற டெண்டரில் 10 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் 2019 ம் ஆண்டு டெண்டரில் கிருஷ்டி நிறுவனம் மட்டுமே பங்கேற்கும்படியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்வதற்கான நிறுவனங்களில் குறிப்பிட்ட கிருஷ்டி நிறுவனம் உள்ளே வருவதற்கும், வேறு நிறுவனங்களை தவிர்க்கவும் மாற்றம் செய்து ஊழல் நடந்துள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்களின் எம்.டி யாக இருப்பவர் குமாரசாமி, இவர் ஏற்கனவே ஐ.டி ரெய்டில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிலோ 38 ரூபாய் விலையான சர்கரையை, ஜூலை 2019 டெண்டரில் 48 ரூபாய் என 10 ரூபாய் அதிகமாக கொடுத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடைகளில் 38 ரூபாய்க்கு இப்போதும் சர்க்கரை கிடைக்கிறது.. ஆனால் கிருஷ்டி நிறுவனத்திடம் 48 ரூபாய்க்கு சர்க்கரை வாங்கியுள்ளனர். பாமாயில் வாங்கியதிலும் ஊழல் செய்யப்பட்டுள்ளது. அதிகம் பேர் போட்டியிடாதபடியான டெண்டர்களை உருவாக்கி பாமாயிலை கிருஷ்டி. நிறுவத்திடம் வாங்கியுள்ளனர். உடைத்த பருப்புகள்தான் சப்ளை செய்ய வேண்டும் என்கிற விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. இப்போதும் உடக்காமலேயே கிருஷ்டி நிறுவனம் பருப்பு வழங்கியுள்ளது.. அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. பருப்பில் மட்டுமே 111 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். சுதா தேவி ஐ.ஏ.எஸ் சப் கமிட்டியில் அதிகாரியாக உள்ளார். அரசுக்கு இழப்பு என்பது மக்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படும் என அதிகாரிகள் மெனக்கெடவில்லை. ஒரு ரேசன் கார்டுக்கு இவ்வளவு என ஒதுக்கப்பட்ட நிலையில் 10 ம் தேதிக்குள் போகவில்லை என்றால் மேற்படி பொருட்கள் கிடைக்காது என மக்கள் புலம்புவதை பார்க்க முடியும். இதனை கண்டுகொள்ளாத அமைச்சர் காமராஜை அமைச்சரவையிலிருந்து நீக்க முதல்வர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.. எனக் கோருகிறோம். சுதாதேவி ஐ.ஏ.எஸ் அதிகாரி மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். மதிய அரசின் பொதுத்துறை நிறுவனமும் இந்த ஊழலில் பங்கேற்றுள்ளதால் இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம். இந்த ஊழலில் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்..

tn_che_03_mega_scam_1480_crors_leaked_by_arappor_iyakkam_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.