ETV Bharat / city

’பல தசாப்தங்களாக எங்களை மகிழ்வித்தீர்கள்’ - ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!

author img

By

Published : Apr 17, 2021, 10:37 AM IST

நடிகர் விவேக் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

Vivek
Vivek

நெஞ்சுவலி காரணமாக சென்னை, வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நகைச்சுவை நடிகர் விவேக் இன்று (ஏப்ரல்.17) அதிகாலை காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் விவேக் மறைவிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், ”நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டீர்கள் என்று நம்ப முடியவில்லை. உங்கள் ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். நீங்கள் பல தசாப்தங்களாக எங்களை மகிழ்வித்தீர்கள். உங்கள் நினைவுகள் எங்களுடன் என்றும் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காலமானார் ஜனங்களின் கலைஞன் விவேக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.