ETV Bharat / city

"தமிழ் சினிமாவில் கருத்தியல், வணிகம் இரண்டிலும் வென்ற ஒரே படம் 'ஜெய் பீம்' - கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கருத்தியல், வணிகம் இரண்டிலும் வென்ற முதல் படம் ஜெய் பீம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜெய் பீம் திரைப்படம்
ஜெய் பீம் படக்குழுவினருக்கு பாராட்டு விழா
author img

By

Published : Jan 5, 2022, 1:36 PM IST

சென்னை: சில மாதங்களுக்கு முன்பு அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும், படத்தின் மையக்கருவாக அமைந்த ராஜாக்கண்ணு குடும்பத்தினருக்கு உதவிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கும் அக்கட்சி சார்பில், சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று (ஜனவரி 5) பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், ஜி. ராமகிருஷ்ணன், வாசுகி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஜெய் பீம் படக்குழுவினரை பாராட்டி கௌரவிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேடயம் வழங்கினார்.

ஜெய் பீம் திரைப்படம்
ஜெய் பீம் படக்குழுவினருக்கு பாராட்டு விழா

கம்யூனிஸ்ட் கட்சியினரின் மன உறுதி

விழாவில் பேசிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட நெடிய போராட்ட வரலாற்றின் அத்தியாயத்தை படமாக்கிய ஜெய் பீம் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

படத்தில் ராஜாக்கண்ணுவாக நடித்த மணிகண்டன் பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சியினரின் மன உறுதியைக் கண்டு வியப்பதாகவும், அவர்கள் மக்களின் போராட்டத்திற்காக 90 விழுக்காடு ஒதுக்குகிறார்கள், தங்கள் குடும்பத்திற்காக 10 விழுக்காடு ஒதுக்குகிறார்கள் என்று கூறினார்.

கம்யூனிச இயக்கத்தை படமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திரைப்படம் எடுக்கவில்லை, பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி கதை எழுதும்போது கதைக்குள் அவர்கள் வந்துவிட்டார்கள் என இயக்குனர் ஞானவேல் பேசினார்.

இன்னும் பல மனிதர்கள்

கடலூரில் 1993 முதல் 1996ஆம் ஆண்டு வரை கம்யூனிச இயக்கங்கள் 12 வழக்குகள் நடத்தியுள்ளதாகவும், ராஜாக்கண்ணுவைப் போல பல மனிதர்கள் இருப்பதாகவும் இயக்குனர் ஞானவேல் கூறினார்.

மேலும், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் காட்டியதற்கு காரணமாக, கருப்பு, நீலம், சிவப்பு இனைந்தால் தான் இந்தியாவை ஜனநாயகமாக்க முடியும் எனவும் இயக்குனர் ஞானவேல் விளக்கமளித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில், தமிழ்நாட்டில் கருத்தியல், வணிகம் இரண்டிலும் வென்ற முதல் படம் ஜெய் பீம் என புகழாரம் சூட்டினார். மேலும், அடித்தட்டு மக்களின் நீதிக்கான படமாக இருப்பதால் தான் பலரும் இடையூறு செய்தனர், எதிர்காலத்தில் இதுபோல வரும் படங்களுக்கு இடையூறு செய்யப்பட்டால் அவர்களை எதிர்த்து களப்போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயங்காது எனவும் கூறினார்.

வழக்கை நடத்திய சிபிஎம் ஒன்றிய பொறுப்பாளர் கோவிந்தன் பேசும் போது, தன் கிராமத்தில் பெரும்பான்மையாக இருந்த வன்னியர் சமூக மக்கள் இந்த வழக்கில் கம்யூனிஸ்ட் ஆதரவாக இருந்ததாக தெரிவித்தார். மேலும், ராஜாக்கண்ணுவுக்கு பொய்யாக மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவர் தற்போது கருக்கலைப்பு விவகாரத்தில் சிக்கி சிறையில் உள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: Jai Bhim - சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.