சென்னை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர்கள் தேர்வினை கண்காணிக்க இரு ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சிண்டிகேட் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே காலியாக இருந்த 113 பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு ஓய்வுபெற்ற நீதியரசர் கிருபாகரன் மற்றும் நீதியரசர் பார்த்திபன் ஆகியோரை சிண்டிகேட் குழு நியமனம் செய்தது.

அதைத்தொடர்ந்து நியமனங்கள் நடைபெற்றன. தற்போது மீண்டும் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது அவற்றை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் பால் வசந்தகுமார் மற்றும் ஓய்வு பெற்ற நீதியரசர் வெங்கட்ராமன் சட்டக் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் ஆகியோரை நியமனம் செய்து பல்கலைக்கழக சிண்டிகேட் குழு முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம் சட்ட கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்ற போது ஊழலற்ற திறமையான பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதற்கு வழிவகை ஏற்படும் என்றும் சிண்டிகேட் குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்