ETV Bharat / city

மெரினாவை பராமரிக்க ஐஏஎஸ் அலுவலர் - அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை - Chennai Marina beach

மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு ஐஏஎஸ் அலுவலர் தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

MHC suggestion
MHC suggestion
author img

By

Published : Jul 15, 2021, 2:46 PM IST

சென்னை மெரினா கடற்கரையில் ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்க கோரிய வேலுமணி என்பவர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உலகின் பெரிய கடற்கரையான மெரினாவை முறையாக பராமரிப்பதில்லை என்றும், அதை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை என்றும் தெரிவித்தனர்.

அதற்கு சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முறையாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலரையும், சென்னை மாநகர காவல் ஆணையரையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து, சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அதன்படி, மெரினா கடற்கரையில் குப்பை போடுபவர்களிடம் அபராதம் வசூலிக்கபடுகிறதா? தினமும் எவ்வளவு குப்பைகள், எவ்வாறு குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன? மெரினா கடற்கரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கடற்கரையில் கழிவறைகள் மற்றும் நடமாடும் கழிவறைகள் எத்தனை அமைக்கப்பட்டுள்ளன? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், கடற்கரை பராமரிப்பிற்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது? கடை உரிமையாளர்களிடம் இருந்து எவ்வளவு வாடகை வசூலிக்கப்படுகிறது? குற்றங்கள் நடக்காத வகையில் இரவு 10 மணிக்கு பிறகும் காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா? மெரினா லூப் சாலை அருகிலேயே மீனவர்களுக்கான மீன் அங்காடியை ஏன் அமைக்கக்கூடாது எனவும் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

மெரினாவின் அழகை பாதுகாக்க மாநகராட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன எனவும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு ஐஏஎஸ் அலுவலர் தலைமையில், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு பொதுப்பணித் துறை, காவல் துறை, சுற்றுச்சூழல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், வியாபாரிகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவை தமிழ்நாடு அரசு ஏன் அமைக்கக்கூடாது என விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: திட்டங்களுக்காக இயற்கையை அழிக்கக் கூடாது - அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.