ETV Bharat / city

தற்காலிக மருத்துவப் பணிக்கு நேர்காணல் - மாநகராட்சி - சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் ஓர் ஆண்டு தற்காலிகமாகப் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர் பணிகளுக்கு நாளை, நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மருத்துவ பணியிடங்கள்
மருத்துவ பணியிடங்கள்
author img

By

Published : Apr 28, 2021, 10:23 AM IST

கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. சென்னையில் நான்காயிரத்திற்கும் மேல் தினமும் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி, சுகாதாரத் துறை இணைந்து முகக்கவசம் வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

மருத்துவ முகாமைப் பொறுத்தவரையில் வார்டுக்கு 2 அல்லது 3 என கிட்டத்தட்ட 400 மருத்துவ முகாம்கள் நடத்த மாநகராட்சி முடிவுசெய்துள்ளது. அங்கு மற்றும் மாநகராட்சி மருத்துவமனையில் ஓர் ஆண்டு தற்காலிகமாகப் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர் பணிகளுக்கு நாளை, நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மொத்தமாக 150 இடங்கள் மருத்துவ அலுவலர்கள், 150 செவிலியர் என 300 காலி இடங்கள் உள்ளன. மருத்துவ அலுவலர்களுக்கு மாதம் ரூ.60,000, செவிலியருக்கு மாதம் ரூ.15,000 என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.