ETV Bharat / city

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - ஆன்லைன் விண்ணப்பம் நடைமுறை தொடங்கியது - Tamilnadu

தமிழ்நாட்டிலுள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை இன்றுமுதல் (ஜூலை 26) தொடங்கியுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கியது

author img

By

Published : Jul 26, 2021, 12:01 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in, www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் இன்றுமுதல் (ஜூலை 26) ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப கட்டணம்

மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களில் போதுமான அளவில் கரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுப்பிரிவினர் ரூ. 48-க்கு விண்ணப்ப கட்டணம், ரூ. 2-க்கு பதிவு கட்டணத்தை இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.
SC, ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. பதிவு கட்டணம் 2 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்.

இ-சேவை மூலம் விண்ணப்பம்

இணைய வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் மாவட்ட சேர்க்கை சேவை மையங்களில் 'The director directorate of collegiate education chennai-6' என்கிற பெயரில் நேரடியாகவும் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும் அரசு இ-சேவை மையத்தின் மூலமும் விண்ணப்பம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு கல்லூரிக்கல்வி இயக்கத்தின் 044-28260098, 28271911 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'இரண்டாம் சுற்றில் வீழ்ந்த பவானி தேவி!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.